Published : 18 Nov 2016 06:19 PM
Last Updated : 18 Nov 2016 06:19 PM
ஜி.வி.பிரகாஷ் - கவனமே செலுத்தாத நடிப்பும் நடனமும் பலன் தரவில்லை. நாக்கு மடித்து குத்தாட்டம் சகிப்புத்தன்மைக்கு சவால்.
ஆனந்தி - கண்களுக்கு மட்டுமே பெர்பார்மன்ஸ்.
நிக்கி கல்ராணி - ஸ்கோப்பே இல்லை
ஆர்.ஜே.பாலாஜி - சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். ரெட்டை அர்த்த வசனங்களில் நெருட வைக்கிறார்.
பிரகாஷ்ராஜ் - இந்தப் படத்தில், இல்லையில்லை... இப்படி ஒரு படத்தில் பிரகாஷ்ராஜ். ஆச்சரியம்... அதிர்ச்சி... ஆனால், உண்மை.
ரோபோ ஷங்கர், சிங்கம்புலி - கலகலப்பு
எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி - நிறைவு
நான்கடவுள் ராஜேந்திரன் - வந்தார், சென்றார்.
கோவைசரளா - சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை
ஸ்பூஃப் - பிஎஸ்என்எல் விளம்பரம், பேசுவதெல்லாம் உண்மை - கலாய்ப்பும் கலாய்ப்பு நிமித்தமும்
அப்டேட் வசனம்: மலர் டீச்சர், கண்டெய்னர், வயர், பான் கார்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாநிலம் ஏற்காதது, விஜய் விருதுகள், பீப்... - இவையெல்லாம் தியேட்டரில் ரசிகர்களின் ஏதோ ஒரு வகையில் கவனிக்க வைக்கிறது.
சக்தி சரவணன் ஒளிப்பதிவு - குறையொன்றுமில்லை
விவேக் ஹர்ஷன் எடிட்டிங் - சொல்லவே ஒன்றுமில்லை
ஜி.வி.பிரகாஷ் இசை - பரவாயில்லை
எம்.ராஜேஷ் - கதையும், சந்தானமும் இல்லாமல் எடுத்த படம். கதை மட்டுமல்ல 'க' கூட இல்லை.
ரசிகர்கள் - பாவம் என்பதற்கு சமமான எல்லா வார்த்தைகளும் சமர்ப்பணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT