Published : 11 Nov 2016 08:45 AM
Last Updated : 11 Nov 2016 08:45 AM
'சிவாஜி' படத்தில் இடம்பெற்றுள்ள கறுப்பு பணம் வசனங்கள் மற்றும் இறுதி பெயர் ஓட்டத்தில் வரும் காட்சிகள் உருவானது எப்படி என்று உதவி இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.
'சிவாஜி' படத்தில் கறுப்பு பணம் பற்றி இடம் பெற்ற பதிவு குறித்து அப்படத்தின் உதவி இயக்குநரும், ‘கப்பல்’ படத்தின் இயக்குநருமான கார்த்திக் ஜி.கிரிஷ் கூறியதாவது:
‘சிவாஜி’ படமே கறுப்பு பணத்தை ஒழிப்பதை மையமாக வைத்து உருவானதுதான். ரஜினிகாந்த் ஒரு இடத்தில் ஆடிட்டர்ஸ் முன்பு, “நீங்க ஏமாத்துற பணமெல்லாம் வரிகள் மூலம் திரும்பவும் உங்களையே பாதிக்குது” என்று பேசுவார்.
இப்படியான யோசனைகள் எல்லாமே இயக்குநர் ஷங்கர் சார் சொன்னதுதான். எல்லாவற்றையும் படத்தில் வைக்க முடியாததால் ‘கிரெடிட் கார்ட் மூலம்தான் எல்லாமும் வாங்க முடியும். அதை விவசாயிகள் எப்படி பயன்படுத்துவார்கள்’ என்பது உள்ளிட்ட விஷயங்களை படத்தின் முடிவில் ‘டைடில் ரோல்’ போகும்போது பயன்படுத்தினோம்.
அப்படித்தான், ‘இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. 100 ரூபாய்தான் செல்லும்!’ என்ற நாளிதழ் பதிவையும் படத்தின் முடிவில் வைத்தோம்!’’ என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT