Published : 07 Nov 2016 03:02 PM
Last Updated : 07 Nov 2016 03:02 PM
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 7), அவரின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து தங்கள் வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ட்விட்டரில் அது தொடர்பான பதிவுகள் >#happybirthdaykamalhaasan என்ற ஹேஷ்டேகில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன. அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..
காலங்கள் கடந்தாலும் உலக நாயகனின் பரிமாணங்கள் என்றும் அழியாது..
உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் சினிமாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நடிகர்
இயக்குநர்
தயாரிப்பாளர்
பாடலாசிரியர்
பாடகர்
நடனக்கலைஞர்
கவிஞர்
திரைக்கதை எழுத்தாளர்
*
சுருக்கமாக...,
இந்திய சினிமாவின் விக்கிபீடியா. #HappyBirthdayKamalHaasan
விழுவதென்றாலும் மழை போல் விழுவேன் எதிரிகள் சுகம் காண..
எழுவதென்றாலும் அலை போல் எழுவேன் நண்பர்கள் நலம் காண..
ஒரு நல்ல புத்தகம் வாசிக்கின்ற அனுபவத்தை கமலின் நடிப்பு ஏற்படுத்தும். இன்னும் சொல்லப்போனால் அவரைப் பூனையாகவும் புலியாகவும் நடிக்கத்தெரிந்த கலைச்சிம்மன் என்று கூடக் குறிப்பிடலாம். உலகத்திரைப்படங்கள் பார்ப்பீர்களா என்றால் தைரியமாகக் கமல் திரைப்படங்கள் பார்ப்பேனெனச் சொல்லலாம்.
சினிமாவை பணமாக, அரசியலாக அல்லாமல் சினிமாவாக மட்டும் பார்க்கும் அபூர்வக் கலைஞன்.
உலக நாயகனின் கனவு மெய்ப்பட வேண்டும். "மருதநாயகம்" மண்ணில் உலா வர வேண்டும். இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.
ரஜினி இடத்திற்கு ஆயிரம் பேரு ஆசைப்படலாம். ஆனால் கமல் என்ற இடத்தை நெருங்க கூட ஒருவரும் இல்லை!
நடிப்புல இத்தன வகை இருக்கானு பார்த்து வியக்க வச்ச கலைமகளின் தலைமகன். - கமல்
நடிப்பில் கேரக்டருக்கு தகுந்த மாதிரி சிரிப்பதிலும், அழுவதிலும், டயலாக் டெலிவரியிலும் நான் பார்த்து வியந்த சில நடிகரில் கமல் முதன்மையானவர்.
krishnaprasanth
வேஷங்கள் போடுபவர் நாயகன். வேஷங்களையே விஸ்வரூபங்கள் எடுக்கச்செய்பவர் உலக நாயகன். #HappyBirthdayKamalHaasan
இந்தியாவில் வேறு எந்த நடிகனும் கமல் அளவிற்கு உச்சங்களில் நின்று விளையாடியதில்லை. ஆனால் தொண்ணூறுகளின் கமலுக்கான ஏக்கம் மட்டும் தீர்ந்தபாடில்லை. கமல்ஹாசன் தனது பேட்டியில் சொன்னதை அவருக்கே நினைவூட்ட வேண்டியிருக்கிறது. காலம் குறைவாக இருக்கிறது மிஸ்டர் கமல்.
சிவாஜி நடிப்பெனும் நிறுவனத்தை தமிழ் திரையுலகில் நிறுவினார், கமல் அதற்கு இந்தியா முழுவதும் கிளைகள் திறந்தார். பிறந்த நாள் வாழ்த்துகள் கமல்.
இன்று காலை நாங்கள் இரத்த தானம் செய்து, கமலுக்கு வாழ்த்துகள் சொன்னோம்.
மேக்கப் போட்டால்தான் சிலரை நடிகர் என்றே அடையாளம் காண முடியும். ஆனால் நீங்கள் மேக்கப் போடுவதே நீங்களாகத் தெரியக்கூடாது என்பதற்காகத்தான்.
தமிழ் சினிமாவின் தசாவதாரம்.
எவ்வளவு விமர்சனங்கள் வைக்க முடியுமோ, அதே அளவு வாழ்த்துகளும் வைக்க முடியும் கமல் எனும் கலைஞனுக்கு.....!
பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கமல்ஹாசன் சார்.
வெகுமக்களைத் தூக்கியெறிந்து விடாமல் அவர்களின் உலகத்தில் இருந்துகொண்டு, அவர்கள் பார்க்கும் வெகுஜனத் திரைப்படங்களுக்குக் கலையம்சத்தைக் கூட்டியவர்.
கெட்டப் மாற்றம் என்பது முகத்தில் ஒரு மருவை ஒட்டிக்கொண்டால் போதும் என்றியிருந்த சினிமாவில் தலை முடி முதல் முக பாவனை, உடல் மொழி வரையில் மாற்றி புதிய அவதாரங்களை நிறுவியவர். ஒவ்வொரு புதுப்படங்களிலும் நமக்கு அறிமுகம் இல்லாத புது கமலை நிச்சயம் பார்க்கலாம்.
கமல் நல்ல படங்களை எடுத்தாரா என்பதை காலம் தீர்மானிக்கும், ஆனால் ரசிகர்களின் ரசனையை வளர்த்தெடுத்தார் என்பதுமட்டும் உண்மை !!
'உனக்குள்ள நடமாடிக்கிட்டு இருக்குற மிருகம்தான் எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கு',
'போங்கடா... போய் புள்ள
குட்டிங்களைப் படிக்க வைங்கடா',
'வீரம்னா என்ன தெரியுமா..? பயம் இல்லாதது மாதிரி நடிக்கிறது',
'ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட நியாயம் என்னான்னு தெரியும்',
'சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும்போது யாருக்கும் தெரியுறதில்லை',
'மன்னிக்கிறவன் மனுஷன்,மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்'
-இவை எல்லாம் வசனகர்த்தா கமல் எழுதிய புகழ்பெற்ற வசனங்கள்!
கமல் இன்றி அமையாது சினி உலகு. வாழ்த்த வயதில்லை. ரசிக்க மட்டுமே முடியும் என்னால்
கலை உலகம் கண் விழித்த நாள் இன்று. கமல் 62!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT