Last Updated : 17 Nov, 2016 10:54 AM

 

Published : 17 Nov 2016 10:54 AM
Last Updated : 17 Nov 2016 10:54 AM

இதுதான் நான் 52: மின்சார நினைவு!

‘மிஸ்டர் ரோமியோ’, ‘மின்சார கனவு’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘காதலா காதலா’ன்னு நடனம், நடிப்புல பிஸியா இருந்தப்போ என்னோட நிஜ வாழ்க்கை ரொம்ப இறுக்கமாத்தான் நகர்ந்துச்சு. ஒவ்வொரு நாள் ஷூட்டிங் கிளம்பும்போதும் கண்ணாடி முன்னாடி நின்னு, ‘என்னடா பிரபு பண்றே. ஏன் இப்படி? என்ன நடக்குது?’ன்னு என்னை நானே பார்த்து கேட்டிருக்கிறேன். இந்தப் பிரச்சினை எல்லாம் ஏதாவது ஒரு மேஜிக் ஆகி முடிஞ்சிடாதான்னும் நினைச்சுப்பேன். இதுதான் அப்போ என் லைஃப்!

டென்ஷன்ல நல்லா வொர்க் பண்ணு வேன்னு நான் முன்னாடி சொன்னது மாதிரி இங்கே ‘மின்சார கனவு’ படத்துல வர்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாட்டை பத்தி சொல்றேன். முதல்முறை அந்தப் பாட்டை கேட்டேன். என்னோட முதல் ரியாக்‌ஷனே, ‘ப்ப்பா… சூப்பர் பாட்டு!’ன்னு இருந்துச்சு. ஏவி.எம். ஸ்டுடியோவுலதான் ஷூட் பண்ணோம். இந்தப் பாட்டை ஷூட் பண்ணும்போது இதுக்கு நான் நேஷனல் அவார்டு வாங்கு வேன்னு எங்க யாருக்குமே தெரியாது.

பாட்டோட சூழலை டைரக்டர் ராஜீவ் மேனன் சார் சொல்லும்போதே, ‘ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரும் தொட்டுக்காம டான்ஸ் பண்ணணும்!’னு சொன்னார். அதுவும் ரொமாண்டிக் பாட்டு வேற. ‘எப்படி சார்?’னு கேட்டேன். டைரக்டரே ஆடிக் காமிச்சார். அவரோட ஈடுபாடும், ஐடியாவும் ரொம்பப் புதுசா இருந்துச்சு. அதை நான் ரொம்ப ரசிச்சேன். அவர் சொன்னதுல இருந்து கொஞ்சம் இம்ப்ரவைஸ் பண்ணி நான் பண்ணேன். அவ்வளவுதான்.

இந்தப் பாட்டை ஷூட் பண்ணும்போது கிளைமேட் பயங்கர ஹாட். அதுவும் ‘செட்’டுக்குள்ள எடுக்கிறோம். லைட்டிங் வேற. அப்போ ஏ.சி ஃப்ளோர்கூட கிடை யாது. வியர்வையைத் துடைச்சுட்டு முகத்தை கண்ணாடியில பார்த்தா திரும்ப வியர்வை உருவாகி வெளியில வர்றது தெரியும். அப்படி ஒரு சூட்டோட ஷூட் பண்ணோம். தமிழ், ஹிந்தி ரெண்டு மொழிகள்ல பாட்டை எடுத்தோம். அது வும் ஸீனோட சேர்த்து நாலு நாட்கள்ல முடிச்சிட்டோம்.

‘மின்சார கனவு’ படத்துக்கு முன்னாடி வரைக்கும் லூஸா பேகி பேண்ட் போட் டுக்கிட்டு ஆடிட்டிருந்த நான் இந்த படத்துல இருந்துதான் நார்மல் பேண்ட் போட ஆரம்பிச்சேன். அதுவும் இந்தப் படத்துலதான் எனக்கு முதன்முறையா காஸ்ட்யூம் டிசைனர் எல்லாம் இருந் தாங்க. படத்தோட தயாரிப்பாளர் மகள் ப்ரியா மேடம்தான் டிசைனர். பாட்டுல என்னோட பிளாக் அண்ட் வொயிட் காஸ்ட்யூம்ஸ் அப்படி ஒரு லுக்ல இருந்துச்சு

படத்துக்கு வேணு சார்தான் கேமரா மேன். இந்தப் பாட்டோட லைட்டிங் அப்படி இருக்கும். வேணு சார் மனசுல எதையும் வெச்சிக்க மாட்டார். ‘தப்புன்னா, தப்பு’, ‘ரைட்டுன்னா ரைட்’. எதையும் வெளிப் படையா பேசுவார். பயங்கர உழைப் பாளி. பெரிய ரசிகர். கொஞ்சம் கோபக் காரரும்கூட. இதெல்லாம் அவர்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இந்த மாதிரி உண்மையான ஆளுங்கள பார்க்குறது கஷ்டம். அப்போ முடிவு பண்ணேன். நான் படம் இயக்கினா, முதல் படத்துக்கு இவர்தான் கேமராமேன்னு. அதேமாதிரி பல வருஷங்களுக்கு பிறகு 2005-ல என்னோட முதல் படமான ‘நுவ்வொஸ்தாவன்டே நேனொத் துன்டானா’வுக்கு வேணு சாரை கூப்பிட் டேன். அவரும் சந்தோஷத்தோட, ‘உனக் காகப் பண்றேன் பிரபு!’ன்னு வந்து பண்ணிக்கொடுத்தார். இத்தனைக்கும் அவர் அதுக்கு முன்னாடியே நாலஞ்சு தேசிய விருது வாங்கியவர். எனக்கு அது முதல் படம்.

இந்தப் பாட்டுல கஜோலோட கண்கள் அவ்வளவு எக்ஸ்பிரஷனோட இருக்கும். அவங்க ஷார்ட்டாதான் டிரெஸ் பண்ணி யிருப்பாங்க. ஆனா, அது தப்பாவே தெரியலை. எல்லாரும் அவங்க கண் களைத்தான் பார்த்தாங்க. அந்தப் பாட்டுல கஜோலைத் தவிற வேற யாரையும் நினைச்சுக்கூட பார்க்க முடியலை. அவங்களுக்கு தமிழ் தெரியாது, ஆனா, ஸீன் பண்ணும்போது முதல் நாள் இரவே எல்லா டயலாக்ஸையும் அவங்க கத்துக்கிட்டு அதுக்கு என்ன அர்த்தம்னு கூட தெரிஞ்சிப்பாங்க.

அவங்க டயலாக்ஸ் மட்டும்னு இல்லை. பக்கத்துல இருக்குற மத்த ஆர் டிஸ்ட்டோட டயலாக்கையும் அர்த்தத் தோட தெரிஞ்சுப்பாங்க. எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். ஒருமுறை நான் டயலாக்கை விட்டிருக்கேன். உடனே அவங்க, ‘இந்த டயலாக்கை விட்டுட் டீங்க!’ன்னு என்னோட டயலாக்கை சொன்னாங்க. அப்படி ஒரு ஆர்டிஸ்ட் அவங்க!

இந்தப் படத்துலதான் முதல்முறையா அரவிந்த்சாமி கூட சேர்ந்து நடிச்சேன். அப்போ நான் பெருசா அவர்கிட்ட பேசின தில்லை. இப்போ சமீபத்துல ‘போகன்’ படத்துக்காக சந்திச்சப்போதான் நல்லா பேசினோம். அவர் என் வீட்டுக்கு வந்தார். நான் அவர் வீட்டுக்குப் போயிருக்கேன். எங்களுக்குள்ள ஒரு குட்டியா நல்ல நட்பு இருக்கு.

‘வெண்ணிலவே’ பாட்டோட முடிவுல நானும், கஜோலும் கட்டிப் பிடிக்கிற மாதிரி ஒரு இடம். காதலுக்கு தூதுவனா வர்ற ஒருத்தன் காதலனா மாறும் இடம். ‘‘படத்துல இந்த இடம்தான் ரொம்ப முக்கியமான இடம்”னு என்கிட்ட டைரக்டர் சொன்னார். அதே மாதிரி தியேட்டர்ல அந்த இடம் வரும்போது அப்படி ஒரு கிளாப்ஸ் அடிச்சாங்க. அந்த இடத்துலதான் டான்ஸை விட எமோ ஷனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்கன்னு தெரிஞ்சுது.

இந்தப் பாட்டு இவ்வளவு பெரிய ஹிட் ஆனதுக்கு காரணம் படத்தோட டைரக்டர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கேமராமேன் வேணு சார், பாடல் எழுதுன வைரமுத்து சார், ஹரிஹரனோட குரல், ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணி சாரோட செட் வொர்க் இப்படி பல இருக்கு. இது எல்லாத்துக்கும் அப்புறம் தான் என்னோட நடனம்னு சொல்லிக் கலாம்..!

சாதாரணமா ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு டான்ஸ் பண்றது ரொம்ப கஷ்டம். அது ஏன்?

- இன்னும் சொல்வேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x