Published : 18 Sep 2022 04:14 PM
Last Updated : 18 Sep 2022 04:14 PM

வசனங்கள் வாயில் நுழையவில்லை; நகைகளால் காது வலிக்கும் - பொன்னியின் செல்வன் குறித்து த்ரிஷா

த்ரிஷா

''வசனங்கள் வாயில் நுழையவில்லை. நகைகளால் எனது காது வலிக்கும்'' என 'பொன்னியின் செல்வன்'' படம் குறித்து நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தினை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் படம் வெளியாக இருக்கிறது. இந்த படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட த்ரிஷா தமிழில் பேசினார். அப்போது அவர், ''அன்று நந்தினி பாத்திரத்திற்கு இந்தி ரேகா தான் சரியான தேர்வாக இருந்தார். இப்போது ஐஸ்வர்யா ராய் தான் சிறந்தவராக தோன்றினார். ஜெயமோகன் தமிழ் எளிமையாக இருக்கும். எழுத்தில் அனைத்தையும் சொல்ல முடியும். ஆனால் சினிமாவில் உடல் மொழி மற்றும் வசனங்களை வைத்து தான் ஒரு கதாபாத்திரத்தை கூற வேண்டும். அதை ஜெயமோகன் சிறப்பாக செய்தார். கரோனா காலத்தில் நான் பயந்த ஒரே விஷயம் நடிகர் நடிகைகள் குண்டாகி விடுவார்களோ என்பதைப் பற்றி தான். உடற்பயிற்சி நிலையங்கள் இல்லை. அனால் அதற்கு அவரவர்கள் கடுமையாக உழைத்தாரக்ள்.

வசனங்களை படித்ததும் வாயில் நுழையவில்லை. நிறைய ஒத்திகை செய்தேன். வசனங்களை சரியாக உச்சரிப்பதற்கு மணி சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். முதல் நாள் படப்பிடிப்பிலேயே நானும் ஐசுவும் சேர்ந்த காட்சிகளை எடுத்தார்கள். அப்போதே நாங்கள் நன்றாக பேச ஆரம்பித்து விட்டோம். ஆனால், மணி சார் நீங்கள் இருவரும் இந்த அளவிற்கு நட்பாக இருக்க கூடாது. காட்சிகள் சரியாக வராது என்று கூறினார்.

முழு உடைகள் இருக்கும், நகைகள் நிறைய இருக்கும், நடிக்கும் போது பெரிதாக இருக்காது. ஆனால், ஓய்வு எடுக்கும் போது பெரும் சவாலாக இருந்தது. அதிக எடையால் காது வலிக்கும். தண்ணீர் குடிக்க முடியாது. இப்படத்திலும் ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறது. ஆனால், ஒரு பாத்திரம் ஐகானிக் ஆகுமா என்பதை படம் வெளியாகி அனைவரும் கூறும்போது தான் தெரியும்.

இப்படத்தில் ஆண்களும் பெண்களுக்கு இணையாக ஒப்பனை செய்ய அதிக நேரம் ஆனது. காலை 7 மணி படபிடிப்பிற்காக அனைவரும் அதிகாலை 2.30 மணிக்கே ஒப்பனை செய்ய ஆரம்பித்து விடுவோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x