Last Updated : 10 Nov, 2016 10:24 AM

 

Published : 10 Nov 2016 10:24 AM
Last Updated : 10 Nov 2016 10:24 AM

இதுதான் நான் 51: ‘ஊ... லலல்லா’!

‘ஏபிசிடி’ படத்துக்காக நான் ஆடிய டான்ஸைப் பார்த்த டைரக்டர் ரெமோவும், கேமராமேனும் எது வுமே பேசாம கிளாப்ஸ் மட்டும் அடிச் சாங்க. அப்பாடா... அப்போ ஓ.கே! கூட ஆடுற பசங்கக்கிட்ட இருந்து தப்பிச் சோம்னு தெரிஞ்சுது. இவ்ளோ முக்கியமா நான் இதை ஏன் இங்கே திரும்பவும் சொல்றேன்னா... இப்போ இருக்கிற புது ஸ்டைலுக்கும் பொருந்திட்டோமேன்னு தோணுச்சு. ‘பரவாயில்லையே புது ஃப்ளைட்லேயும் நம்மால டிராவல் பண்ண முடியுதே’ன்னும் இருந்துச்சு.

அடுத்த ஒன்றரை வருஷத்துக்குப் பிறகு திரும்பவும் ரெமோ என்கிட்ட, ‘‘பிரபு சார் ‘ஏபிசிடி-2’ தொடங்கு வோம்’’னு வந்து சொன்னார். அந்த முறையும் கதையைப் பெருசா நான் கேட்டுக்கலை. படத்தில் எனக்கு ரொம்ப முக்கியமான ரோல். டைரக்டர் ரெமோகிட்ட இந்த முறையும், ‘‘இப்போ ஆடுற சின்னப் பசங்க பயங்கரமா ஆடுறாங்க. சரியா வருமா?’’ன்னு கேட் டேன். அதுக்கு அவர் முன்னாடி மாதிரியே சிரிச்சிட்டே என்னைப் பார்த்துட்டு ‘‘சார் போயிட்டு வர்றேன். இதுதான் ஷூட்டிங் டேட்!’’ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார். நானும் சிரிச்சிட்டே ‘ என்னை பெண்டு கழட்ட ரெடியாயிட்டாங்க’ன்னு ரெடி யாயிட்டேன்.

‘ஏபிசிடி’- யைத் தவிர அந்த சமயத்தில் தொடர்ச்சியா என்னோட டைரக்‌ஷன், நடிப்புல வந்த படங்கள்ல எல்லாம் 20 செகண்ட், 30 செகண்ட், ஒரு நிமிஷம், ஒரு சின்ன பிட்டுன்னு முகத்தை காட்டிட்டுப் போய்டுவேன். ஒரு முழுப் பாட்டுக்கு ஆடுவோமேன்னு நான் விரும்பி ஆடின படம்தான் ‘எங்கேயும் காதல்’. அந்தப் படத்தில் வர்ற பாட்டோட முதல் வரியும் ‘எங்கேயும் காதல்’. அது எனக்கு பிடிச்ச படமும்கூட!

ஆக்‌ஷன்… ஆக்‌ஷன்னு ஓடிட்டிருக் கோமே, ஒரு லவ் படம் கொடுக்கணும்னு நினைச்சிட்டிருந்த காலகட்டத்தில் நான் செய்த காதல் படம் அது. படத்தின் பெரும்பகுதி பிரான்ஸ் நாட்டுல எடுத்தோம். ரொம்ப வேகமா நாற்பது, நாற்பத்திரெண்டு நாட்கள்ல செய்த படம்னு நினைக்கிறேன்.

ஜெயம் ரவி, ஹன்சிகாவோட முதன்முறையா நான் சேர்ந்து செய்த படம். ஹாரிஸ் ஜெயராஜ் சாரும், நானும் இந்தப் படத்தோட பாட்டு கம்போஸிங் செய்ய முதன்முறையா ஆஸ்திரேலியா பொயிருந்தோம். புது அனுபவம். அப்போ அவரோட கம்போஸிங் மட்டும் இல்ல; அவரோட லைஃப் ஸ்டைலை யும் பார்த்தேன். ரொம்ப ஜாலியான ஆள். படத்தில் நான் வர்ற ‘எங்கேயும் காதல்’ பாட்டை ஹீரோ, ஹீரோயின் ஷாட்ஸ் எடுக்கிறதுக்கு இடையில கிடைக்கிற கேப், அவங்க டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்ற கேப்லன்னு பெரும்பகுதியை ஷூட் செஞ்சோம். பாட்டு ரொம்பவும் அழகா வந்துச்சு. படம் முழுக்க பிரான்ஸ்ல எடுக்கிறோமே, செலவு அதிகம் ஆகுமேன்னு எதுவும் நினைக்காம என் மேல முழு நம்பிக்கை வெச்ச தயாரிப்பாளர் ‘ஏ.ஜி.எஸ்’ அகோரம் சாருக்கு நன்றி சொல்லணும்!

பிரான்ஸ்ல ஷூட்டிங் நடந்தப்போ தான் ஜெயம் ரவிக்கு குழந்தை பிறக்கப் போகுதுங்கிற நல்ல செய்தி அவருக்கு வந்துச்சு. எப்பவுமே அவர் ரொம்ப ஜாலியான பர்சன். அந்த செய்தி வந்ததும் சந்தோஷத்தில் எமோஷனலாகி... கண் கலங்கவும் செய்துட்டார். குழந்தை பிறக்கிறப்ப தன் மனைவிகூட தான் இருக்கணும்னு எங்கள்ட்ட அந்த சமயத்துலேயும் அனுமதி கேட்டுட்டுத்தான் போனார். ‘‘உடனே கிளம்புங்க!’’ன்னு சொல்லி அவரை அனுப்பிவைத்தோம். அவ ரும் போய்ட்டு ரெண்டு நாட்கள்ல சந்தோஷமா பிரான்ஸ் திரும்பினார்.

ஜெயம் ரவியோட அந்த எமோஷனல் மூவ்மெண்ட்ஸைப் பார்த்தப்ப எனக்கு என்னோட முதல் குழந்தை பிறந்தப்ப, நான் என்ன மனநிலையில் இருந் தேன்கிறது நினைவு வந்துடுச்சு. அந்த நேரத்தில் நான் ‘மின்சார கனவு’ படத்தில் ‘ஊ… லலல்லா’ பாட்டோட ஷூட்டிங்ல இருந்தேன்னு முன்பே உங்கள்கிட்ட சொல்லியிருக்கேன். அதுவும் அன்றைக்கு சென்னையில்தான் இருந்தேன். ஆனா, குழந்தை பிறந்தப்ப என்னால ‘அவங்க’கிட்ட இருக்க முடி யலை. அதுக்குக் காரணம்கூட நான் தான். முட்டாள் மாதிரி போகாம இருந்துட்டேன். அது எவ்ளோ பெரிய தருணம். ச்சே..! இப்போ இதை எழுதும்போதுகூட ‘மிஸ் பண் ணிட்டோமே’ன்னு இருக்கு.

குழந்தை பிறக்கும்போது ஒரு ஹஸ்பண்ட் எந்த மாதிரியான மன நிலையில் இருப்பாங்க? எப்படி துடிச்சிப் போய் ஓடுறார் பாருங்கன்னு ரவி யைப் பார்த்தப்போ எனக்குத் தோணுச்சு. நாம் இப்படியெல்லாம் இல்லாமப் போய்ட்டோமேன்னும் தோணுச்சு.

அதுவும் அந்த ‘ஊ… லலல்லா’ பாட்டுல ஒரு முழு மியூஸிக் பீஸ்ல நான் ஆடுவேன். அந்த இடத்தை ஷூட் பண்ணும்போதுதான் மகன் பிறந்த செய்தி எனக்குத் தெரிய வருது. படம் ரிலீஸாச்சு. அந்த பாட்டு வரும்போது தியேட்டர்ல பயங்கர கிளாப்ஸ், விசில்னு பறந்துச்சு. அதை ஷூட் பண்ணும்போது குழந்தையைப் பார்க்க முடியலையேங்குற அந்த ஃபீலிங்கோடத்தான் அந்த மியூஸிக் பீஸ்ல ஆடினேன். இப்படியும் சிலமுறை ஆகும்.

‘மின்சார கனவு’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘காதலா காதலா’, ‘விஜபி’ன்னு நான் அந்தக் காலகட்டத்தில் செய்த படங்கள்ல எல்லாம் என்னோட டான்ஸ், நடிப்பு எல்லாத்தையுமே ஜாலியா கொண்டாடினாங்க. ஆனா, அதுக்குப் பின்னாடி என்னோட ரியல் லைஃப்ல என்னென் னமோ நடந்துட்டிருந்துச்சு.

எவ்வளவுக்கு எவ்வளவு என்னை படங்கள்ல ஜாலியா பார்த்தீங்களோ… அவ்வளவுக்கு அவ்வளவு பின்னாடி வாழ்க்கையில் பல விஷயங்கள் போய்ட்டிருந்தது. சின்னப் பையனா அப்போ எனக்கு ஒண்ணுமே புரி யலை. என் பர்சனல் லைஃப் தெரிஞ்ச வங்க ரெண்டு மூணு பேர், ‘‘எப்படி மேனேஜ் பண்றீங்க? இதெல் லாம் எப்படிங்க?’’ன்னும் கேட்டிருக் காங்க. அதுக்கு நான், ‘‘மேனேஜே பண்ணலையே சார். என்ன நடக்குதுன்னு எனக்கும் ஒண் ணுமே தெரியலையே!’’ன்னு சொல் வேன்.

அப்போ அவங்க, ‘‘கவலைப்படா தீங்க சார். கடவுள் உங்களோட எல்லா விஷயங்களையும் சரி பண்ணிடுவார்!’’னு சொல்வாங்க. அப்படி ஒரு இறுக்கமான சூழ்நிலையில்தான் இருந்தேன். காலையில எழுந்தேன்னா, ‘அப்பாடா! இன்றைக்கு ஒருநாள் எப்படி போகும்னுதான்!’’ எழுந்திருப்பேன். ஆனா, ஷூட் டிங் போய், ‘ஷாட் ரெடி’ன்னதும் அப்போ வேற.

சினிமாவுல ஹீரோ வந்து கண்ணாடி முன்னாடி நின்னு தனக்குத் தானே சில நேரத்துல பேசிட்டுப் போவார். அந்த மாதிரி நிஜ வாழ்க்கையில கண்ணாடி முன்னாடி நின்னு நானும் பேசியிருக் கேன். அப்படி என்ன பேசினேன்?

- இன்னும் சொல்வேன்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x