Published : 24 Aug 2022 01:56 AM
Last Updated : 24 Aug 2022 01:56 AM

இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா தற்போது நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். 'ஈஸ்வரன்', 'ராக்கி', 'குற்றமே தண்டனை', 'திருச்சிற்றம்பலம்' என அடுத்தடுத்து அவர் நடிப்பில் படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் பாரதிராஜாவின் நடிப்பு கவனம் ஈர்த்தது.

இதனிடையே, இன்று அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாரதிராஜாவின் உடல்நலம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசியுள்ள அவரின் மகன் மனோஜ், "வழக்கமான சர்க்கரை நோய் பரிசோதனை செய்யவே மருத்துவமனைக்குச் சென்றார். சோதனையில் உப்பின் அளவு குறைந்தால் நீர்சத்து குறைபாடு இருப்பது தெரியவந்ததை அடுத்து மருத்துவர்கள் சில நாட்கள் அவருக்கு ஓய்வு தேவை என்பதை அறிவுறுத்தினர். அதன்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அப்பாவின் உடல்நிலை இப்போது நன்றாக உள்ளது. சில நாட்கள் ஓய்வுக்கு பின் வீடு திரும்புவார்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x