Published : 23 Jun 2014 03:57 PM
Last Updated : 23 Jun 2014 03:57 PM
திரைப்பட இயக்குநர் ராம. நாராயணன் மறைவையொட்டி, தமிழ் திரையுலக படப்பிடிப்புகள் அனைத்தும் ஒருநாள் ரத்து செய்யப்படுகின்றன.
பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான ராம நாராயணன் சிறுநீரக கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். சிங்கப்பூர் மருத்துவமனையில் அவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது.
ராம. நாராயணன் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள்.
சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது.
இயக்குநர் ராம. நாராயணன் மறைவையொட்டி, தமிழ் திரையுலக படப்பிடிப்புகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT