கவனம் ஈர்க்கும் வசனங்கள் -  சிபிராஜின் ‘வட்டம்’ ட்ரெய்லர் எப்படி?

கவனம் ஈர்க்கும் வசனங்கள் -  சிபிராஜின் ‘வட்டம்’ ட்ரெய்லர் எப்படி?

Published on

சிபிராஜ் நடிக்கும் 'வட்டம்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் எப்படியிருக்கிறது என்பது குறித்து பார்ப்போம்.

'மதுபானக்கடை' படத்தின் மூலம் அறியப்பட்ட இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில் சிபிராஜ் நடித்துள்ள படம் 'வட்டம்'. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ஆன்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தில் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லரை பொறுத்தவரை, 'இந்த பொண்ணுங்கல்லாம் ஏன் இப்படி இருக்காங்க' என பெண்களுக்கு எதிரான வசனங்களுடன் தொடங்குகிறது.

வழக்கமான காதல் கதையாக இருக்கும் என யூகிக்கும்போது, 'பெரிய இரும்பு கதவை திறக்க பலம் தேவையில்லை. சின்ன சாவி போதும்' என படத்தின் கலர் மாறுகிறது.

விறுவிறுப்பு கூட, 'சாக்கடைல ஏறங்கி வேலைபார்க்குறவன் உழைக்காத உழைப்பா? முன்னேறிட்டானா அவன்' என கவனம் ஈர்க்கும் வசனங்களுடன் டாப் கியரில் காட்சிகள் கடக்கின்றன.

தொடர்ந்து, பணத்தை கொள்ளையடிப்பதும், காவல்துறை விசாரணை நடத்துவதும் என காட்சிகள் சூடுபிடிக்க இறுதியில், 'ஒரு பொண்ணு எவ்ளோ பெரிய ஆள் ஆனாலும், அவ ஒரு பொண்ணு. அவள் தாம்பத்யத்துக்கும், குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் மட்டுமே'' என தொடக்கத்தில் வைக்கப்பட்ட வசனத்திற்கு முற்றிலும் எதிர்மாறாக ட்ரெய்லர் முடிகிறது.

மதுபானக்கடை விமர்சன ரீதியாக பாராட்டுப்பெற்ற படம் என்பதால், கமலக்கண்ணன் இயக்கியிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் ஜூலை 29-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in