Published : 24 Jul 2022 04:15 PM
Last Updated : 24 Jul 2022 04:15 PM

பரீட்சார்த்த முயற்சிகளுக்கு தேசிய விருது என்பது விட்டமின் டி - இயக்குநர்  வசந்தபாலன் 

''பரீட்சார்த்த முயற்சிகளுக்கு தேசிய விருது என்பது விட்டமின் டி'' என இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

68வது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் சினிமா 10 விருதுகளை தட்டிச் சென்றது. இந்நிலையில், இந்த தேசிய திரைப்பட விருதுகள் குறித்து இயக்குநர் வசந்த பாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''சூரரைப் போற்று , மண்டேலா , சிவரஞ்சனியும் சில பெண்களும் படம் எங்க இருக்கு ? எப்படி பார்க்க முடியும் ? OTTல்லையா ? Telegraphமா ? Torrentஆ என்ற விசாரிப்புகள் தேசிய விருது அறிவிக்கப்பட்டவுடனே பல பக்கங்களிலிருந்தும் நண்பர்கள் கேட்கத் துவங்கி விட்டார்கள்.

அந்த படங்களை முதன்முறையாகப் பார்க்கத் தேடுவது அல்லது இரண்டாவது முறையாக பார்க்கத் தேடுவது. தேசிய விருதுக்கு உகந்தப்படம் தானா என்று பார்க்க தேடுவது என பல கோணங்களில் மறு பார்வைகள் நடக்கும்.

தேசிய விருதுகள் பொதுவாக இந்த மறு பார்வையை, நுண்ணிய தகவல்களைக் கூர்ந்து கவனிக்க மக்களைத் தூண்டும். எனக்கும் வெயில் திரைப்படம் ரீலிஸான போது கிடைத்த வரவேற்பைத் தாண்டி தேசிய விருது கிடைத்தப்போது வெயில் திரைப்படம் இன்னும் உன்னிப்பாக கவனிக்கப் பட்டு பாராட்டப்பட்டது. கமர்சியல் திரைப்படங்களை விட, மாற்றுப் படங்களுக்கு, புதிய அலை படங்களுக்கு, பரீட்சார்த்த முயற்சிகளுக்கு தேசிய விருது என்பது விட்டமின் டி'' எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x