Published : 30 May 2016 02:52 PM
Last Updated : 30 May 2016 02:52 PM
'உறியடி' (விடியும் வரை விண்மீன்களாவோம்) படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. ''போதிய கவனம் அளிக்கப்படவில்லை, அதீத வன்முறையாக இருக்கிறது, சாதிய அரசியலைப் பேசும் படம், புதிய முயற்சி'' என பல்வேறு விமர்சனங்கள் வரும் நிலையில், நெட்டிசன்கள் 'உறியடி' படத்தை எப்படிப் பார்க்கிறார்கள்?
இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....
மதுபானக்கடை கமலக்கண்ணன் வரிசையில் உறியடி விஜய குமாருக்கும் ஓர் இடமுண்டு.! #உறியடி
#உறியடி - டெஃபனட்லி நாட் ஃபார் அன்டர் 18.
*
4 வருஷ காலேஜ், ஹாஸ்டல் லைஃப்ப திரும்ப பார்த்த ஃபீலிங், கொஞ்சம் ஓவர் டோஸ் ஆஃப் வைலன்ஸ், மத்தபடி வொர்த்து..
#உறியடி - அவசியம் பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம்.. நல்ல கதை, அட்டகாசமான திரைக்கதை. ஆனால் குறைந்த திரையரங்குகளில் மட்டுமே வெளியாகியுள்ளது வருத்தத்திற்குரியது.! தவறாமல் பார்க்கவும் :)
படமாக்கிய விதத்தில் ஒரு கேண்டிட் கேமரா எஃபெக்ட் இருப்பது அபாரம்... #உறியடி
ஜாதிக்கட்சிகளின் சுயரூபத்தை தோல் உரித்து துவைச்சுக் காயப்போட்ட உறியடி பட இயக்குநருக்கு வாழ்த்து.
*
இந்த உலகத்துல ஒருத்தியை மட்டும் மனசுல நினைச்ச ஆம்பளை உலகத்தில் எவனும் இல்ல. #உறியடி
லோ பட்ஜெட்டுதான்.. அதுக்குனு இப்பிடியா அடிப்பீங்க :( #உறியடி
உறியடி... தமிழ் சினிமாவின் ஒரு நல்முயற்சி. கண்டிப்பாக பார்க்கலாம். ரத்தமும் சதையுமாய் இன்னொரு இயல்பு சினிமா.
1. நான்கே நான்கு லொக்கேஷன்கள் மட்டுமே இப்படத்தில்
2. தொய்வில்லாத திரைக்கதை
3. தேவையில்லாத பாடல்கள் இல்லை
4. அனைவரும் புது முகங்கள்
5. தெறிக்க விடப்பட்டுள்ள வன்முறை
படத்துல என்ன பண்ணனும்னு நினைச்சாங்களோ அத யாருக்கும் பயப்படாம அப்படியே பண்ணிருந்தாங்க. #உறியடி
குனிந்தால் பாடம் படி; நிமிர்ந்தால் உலகம் படி - கவிப்பேரரசு வைரமுத்து
நிமிரும்போது உறியடி பார்க்கவும்.
வழக்கமான ஜாதிய கெத்துப் படமாக இல்லாமல் 'உறியடி' தமிழ்த் திரைப்படம் புதிய தடத்தைப் பதித்துள்ளது.
தொடர்புடைய இணைப்பு: >முதல் பார்வை: உறியடி - ஓர் 'அதிரடி' முயற்சி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT