Published : 21 Jun 2022 03:28 PM
Last Updated : 21 Jun 2022 03:28 PM
'ஏதாவது ஒரு சம்பவம் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தால், அப்போது என் பாடல் உங்களுக்கு நியாபகம் வரும் அல்லது எதாவது ஒரு பாட்டு நியாபகம் வந்தால் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவம் அந்தப் பாடலுடன் கனெக்ட் ஆகும்'' என்று இசையமைப்பாளர் இளையாராஜா கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ரசிகர்களின் கேள்விகளுக்கும், கருத்துகளுக்கும் பதிலளித்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர், ''கண்ணே கலைமானே'' பாடலை கண்களை மூடி கேட்கும்போது, 'காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்' என்ற வரிகளின்போது என்னை அறியாமலேயே கண்ணீர் வந்துவிடுகிறது. இதற்காகத்தான் இளையராஜாவை இசையின் கடவுள் என்று கூறுகிறார்கள்'' என தெரிவித்திருந்தார்.
ரசிகரின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள இளையராஜா, ''அந்தப் பாடலை நான் வெகு சீக்கிரமாகவே கம்போஸ் செய்து முடித்துவிட்டேன். அதன் இயற்கையான ஃப்லோ நேரடியாக இதயத்திற்குள் நுழையும் தன்மை வாய்ந்தது. அதனால் மக்கள் அந்தப் பாடல்களை கேட்கும்போது கண்ணீர் வந்துவிடுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு ரசிகர், ''கொஞ்சம் மழைனா போதும் மெட்ராஸ் மக்களுக்கு. உடனே ஆனியர் பக்கோடா, சாய், ராஜா சார். நானும் மெட்ராஸ்காரன் தான்'' என பதிவிட்டுள்ளார். அதற்கு இளையராஜா, ''ஏதாவது ஒரு சம்பவம் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தால், அப்போது என் பாடல் உங்களுக்கு நியாபகம் வரும் அல்லது எதாவது ஒரு பாட்டு நியாபகம் வந்தால் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவம் அந்தப் பாடலுடன் கனெக்ட் ஆகும். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு வேற வழியில்ல'' என்று தெரிவித்துள்ளார்.
Loved reading your #FanTweets pic.twitter.com/iLVdKpnvg2
— Ilaiyaraaja (@ilaiyaraaja) June 21, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...