Last Updated : 24 Apr, 2014 09:43 AM

 

Published : 24 Apr 2014 09:43 AM
Last Updated : 24 Apr 2014 09:43 AM

நெட்டில் மெட்டை அனுப்பினால் எப்படி உயிரோட்டம் இருக்கும்?: தேவா பேட்டி

மீண்டும் அடுத்த ரவுண்டிற்கு தயாராகி விட்டார் இசையமைப்பாளர் தேவா. ‘டம்மி டப்பாசு’ படத்திற்கு இசையமைப்பதோடு தனது ஸ்டைலில் ஒரு கானா பாடலையும் பாடியிருக்கிறார். இதைப்பற்றிக் கேட்டால் உற்சாகமாகப் பேசுகிறார். “இந்த ஆண்டு பிரகாசமாக இருக்கப் போகி றது. ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு அடுத்தடுத்து பல படங்களுக்கு இசை யமைக்கவிருக்கிறேன். எல்லாப் படங்க ளும் வித்தியாசமான கதைகளுடன் கூடிய இளைஞர்களின் படங்கள்” என்று பேசத் தொடங்கினார் தேவா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘டம்மி டப்பாசு’ படத்துக்கு இசை யமைக்க ஒப்புக்கொண்டதற்கு என்ன காரணம்?

இந்தப்படத்தோட இயக்குநர் ஓ.எஸ்.ரவி யின் வித்தியாசமான அணுகுமுறைதான் இந்தப் படத்துக்கு இசையமைக்க காரணம். இந்தப் படத்தில் பாடலுக்கான சூழல்களும், இயற்கையான களமும் என்னை வெகுவாக கவர்ந்தது. புதுவேகத்தோடு, புதிய டிரண்டை மனதில் வைத்து வேலைகளை தொடங்கியிருக்கேன்.

கானா பாடல்களுக்கான வரவேற்பு இளைஞர்களிடம் கூடிக்கொண்டே போகிறதே?

எல்லா காலகட்டத்திலும் கானா பாடல் களுக்கான ரசிகர்கள் இருக்கவே செய்கி றார்கள். எவ்வளவு சோகம் சூழ்ந்திருந்தா லும் ஒரு கானா பாட்டை கேட்கும்போது அடையும் மகிழ்ச்சியை இங்கே நாம பலரும் உணர்ந்துக்கிட்டுத்தானே இருக் கோம். கானா மக்களோடு கலந்த ஒன்று. இப்போது கானா படல்களை பலரும் நன்றாக கையாள்கிறார்கள். குறிப்பாக ‘கானா’பாலா, ‘கானா’ வினோத் ஆகியோர் மிகச் சிறப்பாக அதைப் பாடுகிறார்கள். இப்போது வரும் கானா பாடல்களின் வரிகளிலும் நல்ல ரசனை இருக்கிறது. இது தொடரவேண்டும்.

நடிப்பு வாய்ப்புகள் வந்தும் தவிர்த்துட்டீங்களாமே?

இசைதான் சினிமாவின் போக்கினை மாற்றுகிறது. ‘யானை வரும் பின்னே.. மணி ஓசை வரும் முன்னே’ என்கிற பழமொழி இருக்கே. அதைப்போல சினிமாவோட டிரண்ட்டை முதலில் மாற்றுவது இசை தான். எல்லா விஷயங்களிலும் அதுதான் முன் நிற்கும். இயக்குநர்களே இசை அமைப்பாளராக வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். அவ்வளவு முக்கிய மான இடத்தில் இருந்துகொண்டு எதற்காக நடிக்க வேண்டும் என்று உள்ளுக் குள்ளே தோணியிருக்கலாம்னு நினைக்கி றேன். 92ம் ஆண்டுவாக்கில் நிறைய நடிப்பு வாய்ப்புகள் வந்தன. ஸ்பாட்ல 10, 15 டேக் வாங்கிக்கொண்டு நின்றால் ஓரத்தில் நிற்கும் ஒருத்தர் ‘இவருக்கு எல்லாம் இது தேவையா?’ என்று காது படவே சொல்லிவிட்டால் மனம் தாங்கிக் கொள்ளாதே. ஆகவே நடிப்பு வேண்டாம்னு அப்பவே முடிவெடுத்து விட்டேன்.

மற்ற இசை அமைப்பாளர்களின் இசையில் நீங்கள் பாடுவதை அதிகம் பார்க்க முடிகிறது. ‘ஓபன் தி டாஸ்மாக்’ போன்ற வரிகள் இடம்பெறும் பாடல் அவசியம்தானா?

அந்தப் பாட்டை ஒரு கமர்ஷியல் பாட லாகத்தான் நினைக்கிறேன். ஆன்மீக ஆல்பங்களில் அதிகம் கவனம் செலுத் துகிற ஆள், நான். ஆன்மீக பாடல்களில் வரும் மந்திரங்களை மாற்றி பாடிவிடக் கூடாது. அதை கிண்டலடிப்பதை எப்போதும் தொடர மாட்டேன். அடுத் தடுத்து எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’ படத்தி லும், ‘ஜாக்கி’, ‘நகர்வலம்’ என்று தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கிறேன். என்னை கவர்ந்தால் மட்டுமே பாட ஒப்புக்கொள் கிறேன்.

‘வியாபாரி’ படத்திற்குப் பின் பெரிதாக சினிமாவில் கவனம் செலுத்தாததற்கு என்ன காரணம்?

இடையில் சில படங்களுக்கு இசை அமைத்திருக்கிறேன். சின்னத்திரையில் ‘மஹாபாரதம்’ வரலாற்றுத்தொடர் இசை வேலைகள், இயல் இசை நாடக மன்ற பொறுப்புகள், அவ்வப்போது ஆன்மீக ஆல்பம் என்று பயணம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது வேலைபார்த்து வரும் ‘டம்மி டப்பாசு’ புதிய பயணமாக இருக்கும். மீண்டும் இளைஞர்கள் கொண்டாடும் தேவாவை நிச்சயம் பார்க்கலாம்.

இப்போதைய சினிமா உலகம் எப்படி இருக்கிறது?

இசைத்துறையில் சிலர் சிறப்பாக பணி யாற்றுகிறார்கள். பெரும்பாலும் கானா பாட்டை சிந்துபைரவி ராகத்தில் அமைப் பதையே வழக்கமாக வைத்திருப்போம். நானும் அப்படித்தான் பல பாடல்களை மெட்டமைத்திருக்கிறேன். தம்பி அனிருத் இசையில் நான் பாடிய ‘மான் கராத்தே’ படத்தின் ‘ஓபன் தி டாஸ்மாக்’ பாட்டை நடபைரவி ராகத்தில் முயற்சி செய்து அழகா இசை அமைத்திருப்பார். இப்படி யான புதிய முயற்சிகளை கொண்டாட வேண்டும்.

அதேபோல, தற்போது பலருக்கும் கம்போஸிங்குக்கு நேரமில்லை. சில பாடலாசிரியர்கள் நெட்டில் பாட்டிற்கான மெட்டை அனுப்ப சொல்லி ஈ மெயில் முகவரியை எஸ்.எம்.எஸ் செய்கிறார்கள். இதிலெல்லாம் எப்படி உயிரோட்டம் இருக்கும்? இன்றைக்கு எல்லாமும் ‘நெட்’டி லேயே பிறந்துவிடுகிறது ரொம்பவே வருத்த மாக இருக்கு. 50 பேர் அமர்ந்து தபேலா, டோலாக்கு, கீபோர்டு வைத்து கண்டக்டிங் கோடு இசை அமைக்கும் நாட்கள் எல்லாம் எங்களோட முடிந்துவிடுமோ என்றே மனதில் படுகிறது.

ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு செயலிலும் ரொம்ப ஆட்டம் போடும்போது அந்த திறமையை மிஞ்சம் விதத்தில் அந்த இடத்திற்கு இன்னொருத்தர் வந்து நிற்பார் என்பதை எல்லோருமே புரிந்துகொண்டு வேலை களை தொடர்ந்தாலே போதும். வேறொன்றும் சொல்வதற்கு இல்லை.

படம்: கோமளம் அ.ரஞ்சித்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x