Published : 06 Jun 2022 08:48 PM
Last Updated : 06 Jun 2022 08:48 PM
''இந்தப் படம் நான் லீனியர் சிங்கிள் ஷாட் என்று சொல்வதற்கு பின்னால் பெரும் உழைப்பு இருக்கிறது'' என்று இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
ஆர்.பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம், 'இரவின் நிழல்'. வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் முப்பதாண்டு இசை பயண கொண்டாட்ட விழா சென்னையில் நடந்தது. அதில் இந்தி நடிகர் அபிஷேக் பச்சன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, சரத்குமார், ராதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.எல்.விஜய், மனோபாலா, தயாரிப்பாளர்கள் டி.சிவா, தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ஆர்.பார்த்திபன், ''ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டியது அவசியம். இந்த விழாவிற்கு பல நண்பர்களை அழைத்தேன். ஆனால், நேரம் கிடைக்கவில்லை என கூறினார்கள். இருந்தபோதிலும் பாலிவுட்டிலிருந்து நண்பர் அபிஷேக் பச்சன் வந்து சிறப்பித்துள்ளார். நான் அவரை வைத்து ஒரே ஒரு திரைப்படத்தைதான் இயக்கியுள்ளேன். இருந்தாலும் இந்த நிகழ்வுக்காக அவர் வந்துள்ளார்
சினிமா எடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை. பெரிய ஆர்வம் இருக்கு. பொதுவாக, சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத விஷயத்தை செய்ய வேண்டும், அப்போதுதான் சினிமாவின் சரித்திரத்தில் நான் இடம்பெற முடியும் என்ற பேராசை இருக்கிறது.
'இரவின் நிழல்' ஒரு நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம். இந்தப் படம் பற்றி கர்வத்தோட சொல்வதற்கு பின்னால் பெரிய உழைப்பு இருக்கிறது. அதற்கு எனக்கு மிகப்பெரிய ஆதரவு தேவைப்பட்டது. அந்த ஆதரவு ஏ.ஆர்.ரஹ்மான்'' என்றார்.
இந்த நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பைக் காண > ‘இரவின் நிழல்’ இசை வெளியீட்டு விழா - புகைப்படத் தொகுப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT