Published : 19 Jun 2014 11:55 AM
Last Updated : 19 Jun 2014 11:55 AM
ட்விட்டர் தளத்தில் தன் பெயரில் பலர் பேர் பட்டா போட்டு வைத்திருப்பதாகவும், அவர்களுக்கு சில கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் நடிகர் சூரி கூறினார்.
ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் நடிகர் சூரியின் பல போலி கணக்குகள் ஆரம்பித்து இருந்தார்கள். இது தொடர்பாக நடிகர் சூரி போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ட்விட்டர் தளத்தில் இணைந்தால்தான் என்ன என்று சூரியிடம் கேட்டபோது, "அந்தக் கதைய ஏங்க கேட்குறீங்க. ட்விட்டரு பேஸ்புக்குன்னு நம்ம இடத்தை பல பேரு பட்டா போட்டு வைச்சுருக்காங்களே பார்த்தீங்களா? ஆனா, நான் அதையெல்லாம் கருப்பா செவப்பான்னுகூட பார்த்தது இல்ல.
ட்விட்டர், ஃபேஸ்புக்ல ஜாய்ன் பண்ணினா பெரிய விளம்பரம் கிடைக்கும்னு சொல்றாங்க. மாப்புள விருந்துக்கு கூப்பிடுற மாதிரி வாங்க, வாங்கனு கூவிக்கிட்டே இருக்காங்க. அங்க வந்து நான் என்ன பண்ணப் போறேன்?
எனக்கு அதைப் பத்தி ஒண்ணுமே தெரியாது. என்கிட்ட யாராச்சும் ட்விட்டர்ல இருக்கீங்களானு கேட்டா, இல்லங்க சாலிகிராமத்துல இருக்கேன்னு சொல்றேன். அதான் நம்மளோட நார்மல் நாலெட்ஜ்.
என் பேர்ல ட்விட்டர் கணக்கு வைச்சிருக்கிற ஒரு ஆளு தப்பா ஏதேதோ எழுத போலீஸ் கமிஷனர் ஆபிஸ் வரைக்கும் போய் புகார் கொடுத்தேன். நான் எங்க ஊர் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் தலை வைச்சுக்கூட படுத்தது இல்ல. யாரோ பண்ற குசும்பால எதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கு பார்த்தீங்களா?
அய்யா ஆசாமிகளா... எது எழுதுறதா இருந்தாலும் ஒங்க பேர்ல எழுதுங்க. எம்பேர்லதான் எழுதுவேன்னு பாசத்தோட அடம் புடிச்சீங்கன்னா உங்களுக்குப் போக சொத்துகித்து ஏதும் மிச்சம் இருந்தா அதை மட்டும் எம்பேர்ல எழுதுங்க. நல்லாயிருப்பீங்க!" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT