Published : 10 Jun 2014 02:51 PM
Last Updated : 10 Jun 2014 02:51 PM

கத்திக்கு அடுத்த படம்!

'கத்தி' படத்தினைத் தொடர்ந்து பெண்களை மையப்படுத்தி ஆக்‌ஷன் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

விஜய், சமந்தா நடிக்கும் 'கத்தி' படத்தினை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை ஐங்கரன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தினை அடுத்து அஜித் நடிக்கவிருக்கும் படத்தினை இயக்கவிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பல்வேறு செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன.

இந்நிலையில், அடுத்து நேரடி இந்தி படம் ஒன்றிணை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதனை நடிகை சோனாக்‌ஷி சின்கா உறுதி செய்து இருக்கிறார்.

இது குறித்து சோனாக்‌ஷி சின்ஹா, "பெண்களை மையப்படுத்தும் ஆக்‌ஷன் கதையில் நடிக்க இருக்கிறேன். இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறார். நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது" என்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.

ஹாலிவுட்டில் பெண்களை மையப்படுத்திய ஆக்‌ஷன் படங்களான KILL BILL, TOMB RAIDER போன்றவற்றை போல் அல்லாமல், வித்தியாசமான கதைகளத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து ஆக்‌ஷன் படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x