Published : 26 Apr 2016 08:11 AM
Last Updated : 26 Apr 2016 08:11 AM

‘கபாலி’ திரைப்படத்துக்காக 5 நாட்கள் டப்பிங் பேசிய ரஜினி

‘கபாலி’ படத்துக்காக முதல்முறை யாக 5 நாட்கள் டப்பிங் பேசியிருக் கிறார் ரஜினி. பா.இரஞ்சித் இயக்கத் தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையர சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உரு வாகியுள்ள படம் ‘கபாலி’. தாணு தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை யமைத்து வருகிறார்.

இப்படத்துக்கான பிரதான காட்சி களின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. ஒருசில காட்சி களுக்கான படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளதால், டப்பிங் வேலை களையும் தொடங்கிவிட்டனர்.

பொதுவாக, தன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் முழு வதையும் ரஜினிகாந்த் 2 அல்லது 3 நாட்களுக்குள் முடித்துவிடுவார். ஆனால், டப்பிங்குக்கு முன்பு ‘கபாலி’ படத்தை பார்த்த ரஜினி, ‘‘இப்படத்துக்கு டப்பிங்கில் வெவ்வேறு மாதிரி பேசவேண்டி உள்ளது. எனவே, அதிகம் மெனக் கெட வேண்டும்’’ என்று கூறியுள் ளார். அதேபோல, இதுவரை இல்லாத அளவுக்கு ‘கபாலி’யில் தன் காட்சிகளுக்கான டப்பிங்குக்காக மொத்தம் 5 நாட்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.

ரஜினியை அடுத்து, தற்போது கலையரசனின் டப்பிங் நடந்து வருகிறது. உழைப்பாளிகள் தின மான மே 1-ம் தேதி இப்படத்தின் டீஸரை வெளியிடுவதற்கான பணி கள் தொடங்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x