Published : 07 Mar 2022 08:09 PM
Last Updated : 07 Mar 2022 08:09 PM
‘நானே வருவேன்’ படத்தினை இயக்குவது மட்டுமன்றி முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார் செல்வராகவன்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘நானே வருவேன்’. தாணு தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வருகிறது படக்குழு.
இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்து வருகிறார். இசையமைப்பாளராக யுவன் பணிபுரிந்து வருகிறார். இதில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு கதாபாத்திரங்களின் லுக்கையுமே படக்குழு வெளியிட்டுள்ளது.
மார்ச் 5-ம் தேதி செல்வராகவன் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் தமிழ் திரையுலகினர் பலரும் அவருக்கு தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்கள்.
செல்வராகவனுக்கு வாழ்த்துக் கூறும் வகையில், ‘நானே வருவேன்’ தயாரிப்பாளர் தாணு தனது ட்விட்டர் பதிவில் “இயக்கத்தில் சிகரம் தொட்ட செல்வராகவன் நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவருமே இடம்பெற்றுள்ளனர்.
பல்வேறு இயக்குநர்கள் இயக்கத்தில் நடித்து வரும் செல்வராகவன், தனது இயக்கத்தில் தானே நடிக்கும் முதல் படமாக ‘நானே வருவேன்’ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT