Published : 21 Dec 2021 11:36 AM
Last Updated : 21 Dec 2021 11:36 AM
துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஹே சினாமிகா' வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் முக்கியமான நடன இயக்குநராக வலம் வருபவர் பிருந்தா. அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'ஹே சினாமிகா'. கரோனா ஊடங்குக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்தது படக்குழு.
ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'ஹே சினாமிகா' படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக பிரீத்தா ஜெயராமன், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, எடிட்டராக ராதா ஸ்ரீதர், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இப்படம் வரும் பிப்ரவர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Happy to launch the first look of our favourite and super talented @BrindhaGopal1 master’s debut directorial #HeySinamika @dulQuer @MsKajalAggarwal @aditiraohydari pic.twitter.com/5s7Jp6VcHU
— Suriya Sivakumar (@Suriya_offl) December 21, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment