Published : 16 Dec 2021 11:10 AM
Last Updated : 16 Dec 2021 11:10 AM
‘ட்ரிக்கர்’ படத்தின் டைட்டில் காரணம் குறித்து இயக்குநர் சாம் ஆண்டன் விளக்கம் அளித்துள்ளார்.
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்துக்கு ‘ட்ரிக்கர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அருண் பாண்டியன், தான்யா ரவிச்சந்திரன், சீதா, முனீஸ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ப்ரமோத் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் குறித்து இயக்குநர் சாம் ஆண்டன் கூறியுள்ளதாவது:
''இந்தப் படம் ஒரு தந்தையையும், அவரது துப்பாக்கியைப் பற்றிப் பேசுகிறது. அந்தத் துப்பாக்கி படத்தின் கதையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அவர் அதன் ட்ரிக்கரை இயக்குவாரா இல்லையா என்பதுதான் இந்தப் படம் எழுப்பும் கேள்வி. எனவே இந்தக் கதைக்கு இதைவிடச் சிறந்த டைட்டில் எங்களுக்குத் தெரியவில்லை.
எங்களுக்கு இரு வேறு தேர்வுகள் இருந்தன. எனினும் இதையே நாங்கள் இறுதி செய்தோம். மேலும் இப்போதைய காலகட்டத்தில் நம் படங்களுக்கு உலகளாவிய அளவில் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். தமிழ் தெரியாத பார்வையாளர்களும் படத்துடன் எளிதில் ஒன்ற முடியும் என்பதால் ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்''.
இவ்வாறு சாம் ஆண்டன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT