மோகன்.ஜி இயக்கத்தில் நாயகனாகும் செல்வராகவன்

மோகன்.ஜி இயக்கத்தில் நாயகனாகும் செல்வராகவன்

Published on

மோகன்.ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் 'திரெளபதி'. கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியான படங்களில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டிய படம் என்ற பெயரைப் பெற்றது.

திரெளபதி' படத்தைத் தொடர்ந்து 'ருத்ர தாண்டவம்' என்னும் படத்தை இயக்கினார் மோகன்.ஜி.இதில் ரிஷி ரிச்சர்ட், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படமும் குறைந்த முதலீட்டில் பெரும் லாபத்தை ஈட்டியது.

இந்நிலையில் மோகன்.ஜி இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று மாலை வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார்.

அதன் படி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனது அடுத்த படத்தில் நாயகனாக செல்வராகவன் நடிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in