Published : 11 Feb 2016 11:03 AM
Last Updated : 11 Feb 2016 11:03 AM
‘‘என்னை அடையாளம் கண்டது தமிழ் சினிமாதான். தமிழ் ரசிகர்களும் என்னை அவர்களது பக்கத்துவீட்டுப் பெண் போலத்தான் பார்க்கிறார்கள். மலையாள பெண்ணான எனக்கு இது ஒரு பெரிய அங்கீகாரம் என நினைக்கிறேன்..’’ என்று உற்சாகத்துடன் பேசுகிறார் லட்சுமி மேனன். ‘மிருதன்’ படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்திருந்தவரிடம் பேசியதில் இருந்து..
‘வேதாளம்’ படத்தில் தங்கை வேடத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?
எல்லோரும் இப்படி கேட்கிறார்கள். அதை ஒரு முயற்சியாகத்தான் பண்ணினேன். ‘வேதாளம்’ படம் பெரிய வெற்றி அடைந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அதேபோல ‘மிருதன்’ படத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஒரு புதிய முயற்சி பண்ணியிருக்கிறோம். புதிய முயற்சியில் ஏதாவது ஒரு வகையில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. படத்தின் பிரதான பாத்திரங்கள் 7 பேர் மட்டும்தான். மற்ற எல்லோருமே.. பிணங்கள்போல பேய் படங்களில் எழுந்து நடந்துவருவார்களே, அதுபோன்ற ஸோம்பிக்கள்!
வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் தங்கை வேடத்தில் நடிக்கக் கேட்டால் ஒப்புக்கொள்வீர்களா?
இயக்குநர் சிவா கதையைக் கூறும் போதே, கதையில் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்று சொன்னார். ‘தங்கை வேடத்தில் நடிப்பவர்களுக்கு முக்கியத் துவம் இருக்காது’ என்று சொல்பவர் களுக்காக, முக்கியத்துவம் இருக்கிறது என்று காட்டுவதற்காக ஒருமுறை தங்கையாக நடித்துவிட்டேன். இனிமேல் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். தங்கையாக எந்த ஒரு ஹீரோவின் படத்திலும் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறேன்.
இயக்குநர் முத்தையாவுக்கும் உங்களுக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகிறதே..
எனக்கு நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். காதலர் யாரும் இல்லை. இப்போதைக்கு தனியாகத்தான் இருக் கிறேன். எனக்கு அவர் மீது காதல் இல்லை. அவருக்கு என் மீது காதல் இருக்கிறதா என்பது தெரியாது.
முத்தையாவின் படத்தில் நீங்கள் நடிக்காதது ஏன்?
‘மருது’ படத்தில் நாயகியாக நடிக்கக் கேட்டு இயக்குநர் முத்தையா என்னிடம் வந்து கதையெல்லாம் சொன்னார். விஷாலும் போன் செய்தார். ‘மிருதன்’, விஜய் சேதுபதியின் படம் ஆகியவற்றில் நடிக்க ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்ததால், அப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதுமட்டுமன்றி, கிராமத்து வேடத்தில் நடிப்பதற்கு ஒரு சின்ன இடைவெளி விடலாம் என்று முடிவு எடுத்திருந்ததும் ஒரு காரணம்.
பேய் படங் களில் நடிக்கும் எண்ணம் இல்லையா?
பேய் படம் மிகவும் பிடிக்கும் என்றாலும்கூட, பேய் படம் என்றால் எனக்கு ரொம்ப பயம். ஹாலிவுட் தவிர வேறு எதிலும் பேய் படங்கள் சரியாக இருப்பதில்லை என்பது என் கருத்து. ‘நிஜமாகவே பேய் இருக்கிறதோ’ என்று நம்மையே நம்பவைத்துவிடுவதுபோல ஹாலிவுட் படத்தில் காட்டுவார்கள். கடவுள் இருக்கிறார் என்று நம்புவதுபோல, பேய் இருக்கிறது என்பதையும் நம்புகிறேன்.
ஜாதி அடையாளங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று பார்வதி ‘மேனன்’ கூறியிருக்கிறார். இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி?
எனக்கும் ஜாதி, மதம் என்பதெல்லாம் பிடிக்காது. சின்ன வயதில் இருந்தே ‘லட்சுமி மேனன்’ என்பது எனக்கு பழக்கமாகி விட்டது. ரசிகர்கள் மனதிலும் இந்த பெயரே பதிவாகி விட்டது. மற்றபடி, ‘உங்க பெயர் என்ன?’ என்று யாராவது என்னிடம் கேட்டால் ‘லட்சுமி’ என்று மட்டும்தான் சொல்வேன்.
உண்மையைச் சொல்லுங்கள்.. என்ன படிக்கிறீர்கள்?
பள்ளிப் படிப்பு எல்லாம் முடிந்து விட்டது. கொச்சி னில் உள்ள கல் லூரியில் படித் தேன். சரியாக கல் லூரிக்கு போக முடியாததால் நிறுத்திவிட்டேன். இப்போது பல்கலைக் கழகத்தில் படிக் கிறேன். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், படிப்பும் முக்கியம். தொடர்ந்து படிப் பேன். எழுதுவதும் ரொம்ப பிடிக்கும். நான் எழுதுவதை நானே ரொம்ப ரசிப் பேன். இப்போது எழுது வதற்கு நேரம் கிடைப்ப தில்லை.
இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்கள். உங் கள் படத்துக்கு டப்பிங் பண்ணலாமே..
டப்பிங் பேசுவது எனக்கும் ரொம்ப பிடிக்கும். என் படத் துக்கு நானே டப்பிங் செய்யவேண்டும் என்று எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால், இது இயக்கு நர்களின் முடிவு. அடுத்த படத்துக்கு கண்டிப்பாக டப்பிங் பண்ணுவேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT