Published : 11 Aug 2021 05:04 PM
Last Updated : 11 Aug 2021 05:04 PM
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்துக்கு 'இடிமுழக்கம்' எனப் பெயரிட்டுள்ளனர்.
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தேனியில் முடிந்தது. ஸ்கைமேன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்துக்குப் பெயரிடப்படாமல் முழுமையாகப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. தற்போது இந்தப் படத்துக்கு 'இடிமுழக்கம்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதனை நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் ஆன உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
கொடைக்கானல் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், அடுத்தகட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெறவுள்ளது. இதில் நாயகியாக காயத்ரி நடித்து வருகிறார். மேலும், செளந்தர் ராஜா, அருள்தாஸ், மனோபாலா உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்து வருகிறார்கள்.
பாடலாசிரியராக வைரமுத்து, இசையமைப்பாளராக ரகுநந்தன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
Happy to launch the title look of #IdiMuzhakkam #இடிமுழக்கம்
Congrats @seenuramasamy sir & team.@Kalaimagan20 @SkymanFilms @gvprakash @SGayathrie @NRRaghunanthan @vairamuthu @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/8C4cfyMx88— VijaySethupathi (@VijaySethuOffl) August 11, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT