Last Updated : 09 Aug, 2021 06:42 PM

 

Published : 09 Aug 2021 06:42 PM
Last Updated : 09 Aug 2021 06:42 PM

சிவகார்த்திகேயனின் டான் படக்குழுவுக்கு ரூ.19400 அபராதம் 

ஆனைமலை முக்கோணம் பகுதியில் சினிமா படப்பிடிப்பபை காண சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்ட பொதுமக்கள்.

பொள்ளாச்சி 

ஆனைமலை முக்கோணம் பகுதியில்நடந்த சினிமா படப்பிடிப்பை காண நூற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகலின்றி கூடியதால் நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை முக்கோணம் மற்றும்ஆற்றுப்பாலம் பகுதியில் நேற்று மதியம், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தின், படப்பிடிப்பு நடந்தது.

படப்பிடிப்பு நடக்கும் தகவலறிந்து, அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆற்றுப்பாலத்தின்இருபக்கமும், முக்கோணம் பகுதியிலும், சமூக விலகலின்றி கூட்டமாக திரண்டனர். இதனால், பலருக்கும் கரோனாபரவும் அபாயம் ஏற்பட்டது.

மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்து போலீஸார் கூட்டத்தை கலைத்தனர். படப்பிடிப்பு தொடர்ந்து நடந்ததால் நிலைமையை சரிசெய்ய, வால்பாறை டிஎஸ்பி சீனிவாசன் மற்றும் ஆனைமலை வட்டாட்சியர் விஜயகுமார் சம்பவ இடத்துக்குவந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்ததால் கரோனா பரவலை கட்டுப்படுத்த படப்பிடிப்பைநிறுத்தப்பட்டது.

விசாரணையில் முறையாக அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி மற்றும் படகுழுவினர் 18 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். படகுழுவுக்கு வருவாய்துறையினர் ரூ.19,400 அபராதம் விதித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x