Published : 06 Aug 2021 11:46 AM
Last Updated : 06 Aug 2021 11:46 AM

வாழ்வின் நிச்சயமற்ற தன்மையைச் சொல்லும் கதை: ‘இன்மை’ படம் குறித்து இயக்குநர் பகிர்வு

'நவரசா' ஆந்தாலஜியில் இடம்பெற்றுள்ள ‘இன்மை’ பட அனுபவங்களை இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் பகிர்ந்துள்ளார்.

கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி தயாராகி உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று (ஆகஸ்ட் 6-ம் தேதி) வெளியாகவுள்ளது. 'நவரசா' ஆந்தாலஜியில் உள்ள நவரசங்களை வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

இதில் ‘இன்மை’ என்று தலைப்பிடப்பட்டுள்ள ஒரு படத்தை ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சித்தார்த், பார்வதி திருவோத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் கூறியுள்ளதாவது:

'' ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படத்தில் பய உணர்வை வெளிப்படுத்தும் கதையில் நான் பணியாற்றியுள்ளேன். பயம் மட்டுமே அனைத்து உயிரனங்களுக்கும் பொதுவான பண்பு. நீருக்கடியில் வாழும் உயிரினம் உட்பட, உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் பயம் என்பது அடிப்படை உணர்வு. இந்த உணர்வைத் திரையில் காட்ட வழக்கமான ஹாரர் அல்லது திரில்லர் கதை கண்டிப்பாக வேண்டாம் என முடிவு செய்தோம்.

எதிர்பாரா நிகழ்வினால் உருவாகும் சோகமும் அதன் விளைவாக உருவாகும் பயத்தையும் கதையில் கொண்டுவந்தோம். நடிகர் சித்தார்த்துடன் இக்கதை குறித்து விவாத்தித்த பொழுது எனக்கும் அவருக்கும் எதிர்பாரா நிகழ்வுகள் மற்றும் ஷேக்ஸ்பியர் ஆகியவற்றின் மீது பொது விருப்பம் இருந்ததை அறிந்தோம். எனது விருப்பமானது கிங் லியர் அல்லது ஹாம்லெட் போன்ற கதையை எழுத வேண்டும் என்பதுதான். இறுதியில் வாழ்வின் நிச்சயமற்ற தன்மையைச் சொல்லும் கதையைச் சொல்ல முடிவு செய்தோம். இது ‘இன்மை’ பகுதியில் அழகாக வந்துள்ளது''.

இவ்வாறு ரதீந்திரன் பிரசாத் கூறியுனார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x