Published : 24 Jun 2014 12:29 PM
Last Updated : 24 Jun 2014 12:29 PM
'அரண்மனை' படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கே, 'கலகலப்பு 2' படத்தினையும் இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி
வினய், சந்தானம், ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'அரண்மனை' படத்தில் நடித்து, இயக்கி இருக்கிறார் சுந்தர்.சி. பரத்வாஜ் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை விஷன் ஐ குளோபல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றாலும், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்பணிகள் முடிவுற்ற பின், இசை வெளியீடு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
'அரண்மனை' படத்தினைத் தொடர்ந்து, அஜித் படத்தினை இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் சுந்தர்.சி இது குறித்து கருத்து எதுவுமே தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், 'அரண்மனை' தயாரிப்பாளருக்கே 'கலகலப்பு' படத்தின் இரண்டாம் பாகத்தினையும் இயக்க இருக்கிறார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
இப்படத்தில் 3 முன்னணி நாயகன் மற்றும் நாயகி நடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள். 'கலகலப்பு 2' படத்திற்கான கதையினை கேட்ட தயாரிப்பாளர், பிடித்துப் போகவே உடனடியாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.
'கலகலப்பு 2' மற்றும் ஜீவா நடிக்கும் படம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது தயாரிப்பு தரப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT