Published : 17 Jul 2021 06:39 PM
Last Updated : 17 Jul 2021 06:39 PM
'விக்ரம்' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார் கமல்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று (ஜூலை 16) தொடங்கப்பட்டது. இதில் ஃபகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கமலுடன் நடிக்கவுள்ளனர். நேற்றைய படப்பிடிப்பில் கமல் - விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
'விக்ரம்' முதல் நாள் படப்பிடிப்பு வீடியோவைப் பகிர்ந்து கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
" 'விக்ரம்' முதல் நாள். ஏதோ பள்ளி நண்பர்களுடனான ஒன்றுகூடல் போல் இருந்தது. கடந்த 50 ஆண்டுகளில் இதுவரை இத்தனை காலம் படப்பிடிப்புக்கு இடைவெளிவிட்டதில்லை. நிறைய படைப்பாளிகள் கடந்த சில காலமாகப் பணியை முடுக்கிவிடாமல் உள்ளனர். இந்தத் தருணத்தில் தோழர்கள் அனைவரும் முழுவீச்சில் பணி செய்ய அழைக்கிறேன். குறிப்பாக லோகேஷ் மற்றும் பல திறமையான சகோதரர்களான விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கிறேன்."
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
கமல், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி ஆகிய மூவர் கூட்டணியுடன் வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளனர் என்பதைப் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. 'விக்ரம்' படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரனும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணிபுரிந்து வருகிறார்கள்.
சென்னையில் விரைவில் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்க, படக்குழு ஆயத்தமாகி வருகிறது. 'விக்ரம்' படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
I welcome all my comrades from all echelons back to work at RKFI. Especially Mr.Lokesh and his enthusiastic team and my talented brothers, Mr.Vijay Sethupathi and Mr. Fahadh Faasil. (2/2)@RKFI @Dir_Lokesh @VijaySethuOffl
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT