Published : 15 Jul 2021 12:36 PM
Last Updated : 15 Jul 2021 12:36 PM
'அதிகாரம்' படத்தின் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள படம் 'அதிகாரம்'. ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இதனை துரை.செந்தில்குமார் இயக்கவுள்ளார்.
நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது லாரன்ஸ் உடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் மலேசியா, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது. 'அதிகாரம்' படம் தவிர்த்து, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், S.கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ படத்திலும் லாரன்ஸ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Here's the #ADHIGAARAM team welcoming @MusicThaman the man behind the tunes which you'll love @offl_Lawrence @VetriMaaran @Dir_dsk @5starkathir @5starcreationss @GrassRootFilmCo @johnsoncinepro pic.twitter.com/Z3AGkV1Z1N
— Five Star Creations LLP (@5starcreationss) July 15, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT