Published : 13 Jul 2021 02:18 PM
Last Updated : 13 Jul 2021 02:18 PM
'வலிமை' படத்தின் சண்டைக் காட்சிகளை படமாக்க ஐரோப்பாவுக்கு பயணிக்கவுள்ளது படக்குழு.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டரை ஜூலை 11-ம் தேதி வெளியிட்டது படக்குழு. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தில் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய முக்கியமான சண்டைக் காட்சி ஒன்று பாக்கியுள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் எந்த நாட்டுக்கும் பயணிக்காமல் இருந்தது படக்குழு. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியிருப்பதால், எந்த நாட்டுக்குப் பயணித்து சண்டைக் காட்சியைப் படமாக்குவது என ஆலோசித்து வந்தது படக்குழு. இறுதியாக ஐரோப்பாவுக்கு பயணிப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
இதற்காக அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் ஐரோப்பாவுக்கு பயணிக்கவுள்ளனர். குறைந்த அளவிலான குழுவினரை மட்டுமே இங்கிருந்து அழைத்துச் சென்று, மீதமுள்ளவர்களுக்கு அங்கிருக்கும் குழுவினரைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது 'வலிமை' படக்குழு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT