Published : 03 Jul 2021 05:24 PM
Last Updated : 03 Jul 2021 05:24 PM
'விக்ரம்' படத்தின் ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதன் பணிகள் கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியிருப்பதால் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கமலின் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து டர்மரீக் மீடியா நிறுவனமும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக அனிருத், சண்டைக் காட்சிகளின் இயக்குநர்களாக அன்பறிவ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் மலையாளத்தில் 'அங்காமலே டைரீஸ்', 'ஜல்லிக்கட்டு' உள்ளிட்ட பல படங்களின் ஒளிப்பதிவிற்காகக் கொண்டாடப்பட்டவர். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'சர்கார்' படத்துக்கு இவர்தான் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப் படக்குழு ஆயத்தமாகி வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் கமலுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. கமலுடன் ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியானது நினைவுகூரத்தக்கது.
Happy to have you onboard @girishganges brother Cast updates coming soon! pic.twitter.com/ZurXzh92Px
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 2, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT