Published : 31 Dec 2015 09:41 AM
Last Updated : 31 Dec 2015 09:41 AM

வேலையை உதறிவிட்டு நடிக்க வந்தேன்: நடிகை ஆஸ்ரிதா நேர்காணல்

‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் நாயகியாக நடித்த ஆஸ்ரிதா தற்போது ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு.

உங்களுக்கு திரையுலகில் எப்படி வாய்ப்பு கிடைத்தது?

நான் ஹைதராபாத்தில் சைனிக் பூரியில் பிறந்தேன். கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்துக் கொண் டிருந்தபோது மாடலிங் செய்யத் தொடங்கினேன். மிஸ் தென்னிந் தியா போட்டியில் கலந்துகொண்ட எனக்கு அழகான முகத்துக்கான பிரிவில் விருது கிடைத்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்தேன்.

மேலும் நாடகங்களில் நடித்துக் கொண்டே இசை, நடனம் ஆகிய வற்றை கற்றுக் கொண்டிருந்தேன். நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் மூலம்தான் எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

உங்களுக்கு டெல் நிறுவனத்தில் வேலை கிடைத்தும் நீங்கள் அதை உதறிவிட்டு நடிக்க வந்ததாக சொல்லப்படுகிறதே?

உண்மைதான். நான் கல்லூரி யில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது எனக்கு டெல் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. என் அப்பாவி டம், நான் நடிக்கப் போவதாக கூறினேன். அதற்கு அவர் 2 நாட்கள் யோசித்துவிட்டு முடிவு எடுக்குமாறு கூறினார். ஆனால் நான் சினிமாதான் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன். எப்போது வேண்டுமானாலும் வேலை கிடைக்கும், ஆனால் சவாலான பாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு எப்போதாவதுதான் கிடைக்கும்.

தமிழில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?

கன்னடத்தில் ‘ராதா’தான் எனது முதல் படம். அப்படத்தைத் தொடர்ந்து எனக்கு பல்வேறு வாய்ப்புகள் வந்தன. அந்த நேரத்தில் என் புகைப்படங்களைப் பார்த்து ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தனர். அந்தப் படத்தைப் பார்த்து ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறேன்.

வட சென்னை பெண்ணாக நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?

வட சென்னை சம்பந்தப்பட்ட படம் என்றாலே ரவுடிகள் படம்தான் என்ற பிம்பம் தமிழ் சினிமாவில் இருக்கிறது. அந்த பிம்பத்தை ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் கண்டிப்பாக உடைக்கும். இப்படத்தில் எனது பாத்திரத்தை மிகவும் அழகாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் நாகராஜன். கத்தி, ரத்தம் எதுவுமின்றி முழுக்க முழுக்க காமெடி கதையாக இது இருக்கும்.

லட்சுமி மேனன், திவ்யா உள்ளிட்டவர்கள் குடும்பப் பாங்கான பாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்; காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டவர்கள் கிளாமர் கலந்த பாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். உங்களுக்கு இதில் எந்தப் பாதையில் பயணிக்க ஆசை?

இந்த இரண்டு பாதைகளுக்கும் நடுவே பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு நயன்தாராதான் ரோல் மாடல். எந்த பாத்திரமாக இருந்தாலும் அதில் தன் முத்திரையை நயன்தாரா அழகாக பதிப்பார். அவரைப் போல நடிப்பில் பெயர் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

கிளாமர் காட்சிகளில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு என்ன மாதிரியான வேடங்கள் பிடிக்குமோ, நான் எந்த வேடத்துக்கு பொருத்தமாக இருப்பேனோ அதில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x