Published : 26 Dec 2020 09:02 PM
Last Updated : 26 Dec 2020 09:02 PM
'வலிமை' படத்தின் வெளிநாட்டு உரிமை பெரும் விலைக்கு விற்பனையாகியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 'வலிமை' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அஜித்தை வைத்து சில முக்கியக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள சூழலில் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடர்பாக இதுவரை எந்தவொரு முடிவுமே எடுக்கவில்லை.
புத்தாண்டுக்கு ஃபர்ஸ்ட் லுக் என்று வெளியான தகவலில் உண்மையுமில்லை என்கிறார்கள். ஆனால், ஃபர்ஸ்ட் லுக்கைத் தயார் செய்து வைத்துள்ளது படக்குழு. இப்போதைக்கு எந்தவொரு கொண்டாட்டமும் வேண்டாம். கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடலாம் என்றும், முதலில் படப்பிடிப்பை முடிப்போம் என்றும் படக்குழு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், 'வலிமை' படத்தின் வியாபாரமும் தொடங்கியுள்ளது. வெளிநாட்டு உரிமையை பெரும் விலை கொடுத்துக் கைப்பற்றியுள்ளது யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் கொடுத்துள்ள தொகை, முந்தைய அஜித் படங்களுக்குக் கொடுக்கப்பட்ட தொகையை விட அதிகம் என்கிறார்கள்.
கோடை விடுமுறை வெளியீட்டில் 'வலிமை' படக்குழு உறுதியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT