Published : 02 Dec 2020 06:54 PM
Last Updated : 02 Dec 2020 06:54 PM
'தாதா 87 - 2.0' கைவிடப்பட்டதாக வெளியான தகவலுக்கு, இயக்குநர் விஜய் ஸ்ரீ விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன் இயக்கத்தில் வெளியான படம் 'தாதா 87'. இந்தப் படத்துக்குப் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் மட்டுமே சாருஹாசன் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'பொல்லாத உலகில் பயங்கர கேம்', 'பவுடர்' ஆகிய படங்களை விஜய் ஸ்ரீ இயக்கி வருகிறார்.
இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, மீண்டும் சாருஹாசன் நாயகனாக நடிக்கும் 'தாதா 87 - 2.0' படத்தைத் தொடங்கினார் விஜய் ஸ்ரீ. கரோனா ஊரடங்கிற்கு முன்பு முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. கரோனா ஊரடங்கு சமயத்தில்தான், இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்புக்குப் பிறகு, 'தாதா 87 - 2.0' படம் தொடர்பான எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை. இதனால், இப்படம் கைவிடப்பட்டது எனத் தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக இயக்குநர் விஜய் ஸ்ரீ தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"சாருஹாசனுக்கு 90 வயது என்பதால் ( தாதா 2.0 ) அவரை வைத்து நான் இயக்கிய வந்த படத்தின் படப்பிடிப்பு கரோனா காலகட்டம் என்பதால் மட்டுமே ஒத்திவைத்துள்ளோம். விரைவில் நல்லது நடக்கும். உலக நாயகனின் அண்ணா தாதா 'நாயக்கர் வருவார்'. தரமான சம்பவம் இருக்கு".
இவ்வாறு விஜய் ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இந்த விளக்கத்தின் மூலம், 'தாதா 87 - 2.0' படம் கைவிடப்படவில்லை என்பது தெளிவாகிறது.
சாருஹாசன் 90 வயது என்பதால் ( தாதா2.0 )
வைத்து நான் இயக்கிய வந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காலகட்டம் என்பதால் மட்டுமே ஒத்தி வைத்து உள்ளோம் .விரைவில்
நல்லது நடக்கும் .
உலக நாயகனின் அண்ணாதா
'நாயக்கர் வருவார் '
தரமான சம்பவம் இருக்கு pic.twitter.com/IjVJbi0MPx— Vijay Sri G (@vijaysrig) December 1, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT