Published : 18 Oct 2015 09:37 AM
Last Updated : 18 Oct 2015 09:37 AM
நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து, தேர்தலில் போட்டியிடும் நடிகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் ராதாரவி பேசியதாவது:
"தென்னிந்திய நடிகர் சங்கம் பெயர் மாற்றம் என்பது 4 மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. பெயர் மாற்றம் குறித்து பொதுக்குழு கூடி முடிவு எடுக்கும். பெயர் மாற்றத்துக்கு சட்ட சிக்கல் இருக்கிறது"
நடிகர் கார்த்தி பேசியதாவது:
"தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு பெயர் மாற்றுவதைக் காட்டிலும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது, அதற்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். பெயர் மாற்றம் குறித்து பின்னர் முடிவெடிப்போம். பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. இளைஞர்கள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கிறோம். ஆகையால் ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்று வந்தால் தான் நினைத்ததை சாதிக்க முடியும்".
நடிகர் சரத்குமார் பேசியதாவது:
"முதலில் கட்டிடம் கட்டுவது தான் எங்களது கடமையாக இருக்கும். SPIC சினிமாஸ் மூலமாக போடப்பட்டு இருக்கும் ஒப்பந்தம் மூலமாக நிறைய வருமானம் கிடைக்கும். அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து நிறைய உதவிகள் செய்வோம். நாடக நடிகர்களின் குடும்பத்துக்கு கல்வி திட்டத்துக்கு உதவிகள் செய்வோம். தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்ற ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறார்.
அவர் எதை மனதில் வைத்து சொல்லியிருப்பார் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். நாங்கள் பாண்டவர் அணியை விமர்சிக்கவில்லை. அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆதாரங்கள் மூலமாக பதிலளித்திருக்கிறோம். பாண்டவர் அணியின் எண்ணம் சிறப்பாக இல்லை. நாங்கள் ஜெயித்தால் கட்டிடம் கட்டுவோம் என்கிறார்கள், அப்படி என்றால் எங்களால் கட்ட முடியாதா?"
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT