Published : 17 Nov 2020 01:36 PM
Last Updated : 17 Nov 2020 01:36 PM
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பணமில்லாமல் தவித்து வரும் நடிகர் தவசிக்கு, ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
நடிகர் தவசி, கிழக்குச் சீமையிலேயே படம் தொடங்கி அண்ணாத்த வரை நடித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அவருடைய கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அப்படத்தில் குறி சொல்பவராக அவர் தோன்றி கருப்பன் குசும்பன் என்று பேசும் டயலாக் மிகவும் பிரபலமானது.
இந்நிலையில், தவசி தான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பணமில்லாமல் தவிக்கும் நிலை குறித்து உருக்கமாகப் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது.
இது தொடர்பான செய்தியும் ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில், மதுரை சரவணா மருத்துவமனையில் மருத்துவரும் எம்.எல்.ஏ.,வுமான சரவணனின் பராமரிப்பில் இருக்கும் தவசிக்கு நடிகர்களின் உதவிக்கரம் நீளத்தொடங்கியுள்ளது.
நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். அதனை நடிகர் சவுந்தர்ராஜா அவரிடம் சேர்ப்பித்தார். நடிகர் சவுந்தர்ராஜா தனது சார்பாக ரூ.10,000 நிதியுதவி வழங்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT