Published : 08 Nov 2020 07:35 PM
Last Updated : 08 Nov 2020 07:35 PM
நவம்பர் 10-ம் தேதி திட்டமிட்டபடி திரையரங்குகளைத் திறக்க முடிவு செய்து, டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியிருப்பதால் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்குப் பிறகும் கூட தமிழக அரசு திரையரங்குகள் திறப்புக்கு அனுமதியளிக்காமல் இருந்தது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகள் திறப்புக்கு தமிழக அரசு அனுமதியளித்து, அதற்கான வரைமுறைகளையும் வெளியிட்டது.
ஆனால், வி.பி.எஃப் கட்டணம் கட்ட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் மீண்டும் தயாரிப்பாளர்கள் - திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் எந்தவொரு முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. இழுபறியே நீடிக்கிரது. நாளை (நவம்பர் 9) காலை சுமுக முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்க உரிமையாளர்கள் அதிரடி
புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை என்றாலும், நவம்பர் 10-ம் தேதி திட்டமிட்டபடி திரையரங்குகளைத் திறக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். 'தாராள பிரபு', 'ஓ மை கடவுளே', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' ஆகிய படங்களுக்கு டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நவம்பர் 10-ம் தேதி தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு உறுதியாகிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT