Published : 06 Nov 2020 02:59 PM
Last Updated : 06 Nov 2020 02:59 PM
சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள 'வசந்த முல்லை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
'புத்தம் புதுக் காலை' ஆந்தாலஜியைத் தொடர்ந்து, சிம்ஹா நடிப்பில் 'சீறும் புலி', 'வல்லவனுக்கு வல்லவன்', 'இந்தியன் 2' உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் உள்ளன. இந்தப் படங்களுக்கு இடையே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் புதிய படமொன்றிலும் நடித்து வருகிறார் சிம்ஹா.
இன்று (நவம்பர் 6) சிம்ஹாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அப்படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ரமணன் புருஷோத்தமா இயக்கி வருகிறார். இவர் எந்தவொரு இயக்குநரிடமும் பணிபுரியவில்லை. குறும்படங்கள் மூலம் கிடைத்த வரவேற்பால், சிம்ஹா இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளார்.
எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரித்து வரும் படத்துக்கு 'வசந்த முல்லை' எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வருகிறது.
சிம்ஹாவுக்கு நாயகியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். இவர்களுடன் முக்கியக் கதாபாத்திரங்களில் சிலர் நடித்துள்ளனர். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
ஒளிப்பதிவாளராக கோபி அமர்நாத், இசையமைப்பாளராக ராஜேஷ் முருகேசன், எடிட்டராக விவேக் ஹர்ஷன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். 'வசந்த முல்லை' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
மேலும், தனது பெயரை இனி சிம்ஹா என்று மட்டும் குறிப்பிடும்படி படக்குழுவினருக்கு பாபி சிம்ஹா அறிவுறுத்தியுள்ளார். இதனால் 'வசந்த முல்லை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படக்குழுவினரின் அறிக்கை என அனைத்திலுமே சிம்ஹா என்றே உள்ளது.
Here is My Next project Titled as #VasanthaMullai #VasanthaKokila hope u guys like it Thanks @dhanushkraja , @RanaDaggubati & @rakshitshetty for launching the first look poster :) @kashmira_9 @Ramanan_offl @gopiamar @RajeshRadio @vivekharshan @itsRamTalluri @ReshmiMenonK pic.twitter.com/85PXUMUK7e
— Simha (@actorsimha) November 5, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT