Published : 10 Oct 2015 12:15 PM
Last Updated : 10 Oct 2015 12:15 PM
‘தூங்காவனம்’ படத்தில் கமலுடன் நடித்ததில் உற்சாகமாக இருக்கிறார் மது ஷாலினி. இப்படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி கேட்டதும் உற்சாகமாக பேசத் தொடங்கினார்.
நமக்குப் பிடித்த ஒரு நடிகருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வரும்போது கனவு நனவாவதைப் போல இருக்கும். ‘தூங்காவனம்’ படத்தில் எனக்கு அப்படியொரு வாய்ப்பு அமைந்தது. எனக்கு சினிமா தெரியவந்த காலத்திலிருந்து கமல்தான் எனக்கு பிடித்தமான நடிகர், அவருடன் நடிக்க முடிந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமே. அவருடன் திரையில் தோன்றுவதை நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது.
படப்பிடிப்பில் ஒவ் வொரு நாளும் கமல் சாரைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும். அவர் எல்லோருடனும் சகஜமாக பழகுவார். ஆனால் நான் அவரைப் பார்த்தால் பதற்றமாவேன். இதனால் ஒவ்வொரு நாள் படப்பிடிப்புமே எனக்கு சவா லாகத்தான் இருந்தது. அவர் அதை எளிதில் கண்டுபிடித்துவிட்டார். நான் பதற்றமாக இருப்பதால் நான் தயாராக எனக்கான நேரத்தை தந்தார்.
படப்பிடிப்பில் ஒவ் வொரு நாளும் கமல் சாரைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும். அவர் எல்லோருடனும் சகஜமாக பழகுவார். ஆனால் நான் அவரைப் பார்த்தால் பதற்றமாவேன். இதனால் ஒவ்வொரு நாள் படப்பிடிப்புமே எனக்கு சவா லாகத்தான் இருந்தது. அவர் அதை எளிதில் கண்டுபிடித்துவிட்டார். நான் பதற்றமாக இருப்பதால் நான் தயாராக எனக்கான நேரத்தை தந்தார்.
‘அவன் இவன்’ படத்துக்குப் பிறகு ஏன் தமிழ் படங்களில் நடிக்கவில்லை?
சுவாரஸ்யமான கதைகள் ஏதும் என்னிடம் வரவில்லை. என்னால் வழக்கமான கதாநாயகியைப் போல் நடிக்க முடியாது. அதனால்தான் ‘அவன் இவன்’ படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டேன். ஒரு வருடத்தில் 3 படங்கள் வரவேண்டும். பப்ளிசிட்டி வேண்டும் என்றெல் லாம் எனக்கு விருப்பமில்லை. நடிகை பிரியா ஆனந்த் எனது தோழி. அவர்தான் ‘தூங்காவனம்’ படத்தில் நடிக்க என்னை சிபாரிசு செய்தார்.
கமலிடம் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
கமல் ஒரு நூலகம் போல. அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. நான் தினமும் டைரி எழுதுவேன். படப்பிடிப்பு நடந்த நாட்கள் முழுவதும் நான் அன்று என்ன கற்றுக் கொண்டேன் என்பதை எழுதியுள்ளேன். நான் நடிப்புப் பள்ளியில் படிக்கவில்லை. நடிக்கும்போது பிறரை பார்த்துதான் கற்றுக் கொள்வேன். அதில் கமலைப் பார்த்து அதிக விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன்.
நீங்கள் ராம்கோபால் வர்மா இயக்கத்திலும் நடித்துள்ளீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?
இந்தியில் நான் அமிதாப்பச்சன், சஞ்சய்தத் ஆகியோருடன் நடித்தேன். அது எதிர்மறை பாத்திரம். ராம்கோபால் வர்மா அதில் என்னை புகைபிடிக்க வைத்தார். முதலில் சற்று கடினமாக இருந்தது. வழக்கமாக இயக்குநர் சொன்னபடி நடித்துவிட்டு போவோம். ஆனால் அந்தப் படத்தில் அவர் புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்.
‘உனக்கு எப்படி வேண்டுமோ அப்படி நடி. திருத்தங்கள் இருந்தால் பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறிவிட்டார். அதனால் நாங்கள் சொந்தமாக நடித்தோம். அவர் எங்களை கட்டுப்படுத்தவில்லை. அந்த சுதந்திரம் எனக்குப் பிடித்திருந்தது. அவருக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் நடிகர்களிடம் சகஜமாக, அமைதியாக வேலை வாங்குவார்.
சென்னையில் உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்களா?
ஜனனி, விஷால், ஆர்யா, ஆடை வடிவமைப்பாளர் வாசுகி, பிரியா ஆனந்த் என சென்னையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். சென்னைக்கு வரும்போதெல்லாம் அவர்களுக்கு என் வருகையைத் தெரியப்படுத்துவேன். முடிந்தால் அவர்களைச் சந்திப்பேன்.
சீதாவாக ஒரு குறும்படத்தில் நடித்திருக்கிறீர்களாமே.. உண்மையா?
ஆம். ‘சீதவலோகனம்’ என்ற தெலுங்கு குறும்படத்தில் சீதாவாக நடித்துள்ளேன். புராணத்தில் இடம்பெற்ற ஒரு பாத்திரமாக நடிப்பது வித்தியாசமாகவும், சவாலாகவும் இருந்தது. அந்தப் படம் திரைப்பட விழாக்களில் பங்கேற்கவுள்ளது. மேலும் ஒரு இந்தி படத்தில் நடிக்கவுள் ளேன். மலையாளப் படம் ஒன்றில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
‘அவன் இவன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலாவை சந்தித்தீர்களா..?
இயக்குநர் பாலாவை முடிந்த போதெல்லாம் சந்தித்துள்ளேன். அவரும் அவரது மனைவியும் மிக இனிமையானவர்கள். படப்பிடிப்பில் அவருக்கு தெரிந்த தெலுங்கில் அவர் பேசுவார், எனக்குத் தெரிந்த தமிழில் நான் பேசுவேன். ‘அவன் இவன்’ படப்பிடிப்பை என்னால் மறக்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு வருடம் அது நடந்தது. ஒரு குடும்பம் போல அந்த படக்குழு இருந்தது. பாலாவின் படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT