Published : 25 Sep 2020 08:45 PM
Last Updated : 25 Sep 2020 08:45 PM
எஸ்பிபியை இழந்துவிட்டோம், அவரது குரலை அல்ல என்று இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
எஸ்பிபி மறைவு குறித்து இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"ஒருசில பாடகர்களுக்கு மட்டுமே ஒரு தரம் உள்ளது. அவர்கள் ஒரு பாடலைப் பாடினால் அது ரசிகர்களிடம் சென்று சேர்வதற்கு முன்னாலேயே வெற்றி பெற்றுவிடும். அப்படிப்பட்ட பாடகர்களில் எஸ்பிபி உச்சத்தில் இருப்பவர். அவரை நாம் இழந்துவிட்டோம். அவர் குரலை அல்ல. அது எப்போதும் காற்றில் கலந்திருக்கும்".
இவ்வாறு இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
Only a very few singers have the quality,they sing a song and it will be a hit even before it reaches the audience. SPB sir was the top among them. We lost him, not his voice. It will always be in the air pic.twitter.com/5FuZJ6Tyrj
— Shankar Shanmugham (@shankarshanmugh) September 25, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT