Published : 24 Sep 2020 08:24 PM
Last Updated : 24 Sep 2020 08:24 PM

தனது பெயரில் போலி விளம்பரம்: இயக்குநர் அஸ்வின் சரவணன் காட்டம்

சென்னை

தனது பெயரில் வெளியாகியுள்ள போலி விளம்பரம் தொடர்பாக இயக்குநர் அஸ்வின் சரவணன் காட்டமாக ட்வீட் செய்துள்ளார்.

சில சமயங்கள் போலி சினிமா விளம்பரங்களை வெளியிட்டுப் பலரை ஏமாற்றுவது உண்டு. அது இப்போது அனைத்துத் திரையுலகிலும் நடைபெற்று வருகிறது. தனது பெயரில் போலி விளம்பரங்கள் தொடர்பாகப் பல இயக்குநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது 'மாயா', 'கேம் ஓவர்' படங்களின் இயக்குநர் அஸ்வின் சரவணன் தனது பெயரில் வெளியாகியுள்ள விளம்பரங்களைப் பகிர்ந்து காட்டமாக ட்வீட் செய்துள்ளார்.

அதில் அஸ்வின் சரவணன் கூறியிருப்பதாவது:

"AAA fel!s கிரியேஷன்ஸ் பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம். திரைத்துறையில் உள்ள சில மதிப்புமிக்க நடிகர்களுக்கு, ஒரு போலியான நடிகர் தேர்வை நடத்த முயன்றுள்ளது. பாலியல் ரீதியான தேவைகளுக்காக இல்லாத ஒரு படத்தில் என் பெயரைப் பயன்படுத்தியுள்ளனர். கீழ்க்காணும் ஸ்கிரீன்ஷாட்கள் எனக்குக் கிடைக்கப்பெற்றன. அவை எனக்குச் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தின.

இதுபோன்ற சில இழிபிறவிகள் திரைத்துறையில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு பெண்ணின் கனவையும் கலைக்கின்றனர். இதை நான் சட்டரீதியாகக் கொண்டுசெல்ல நினைக்கிறேன். ஆண்களுக்கும் பெண்களுக்கும் திரைத்துறை ஒரு சிறந்த இடமாக மாறும் என்று நம்புகிறேன்.

தயவுசெய்து இதுபோன்ற போலியான நடிகர் தேர்வுகள் குறித்துக் கவனமாக இருக்கவும். நம்பகமான தரவுகளிடமிருந்து ஒன்றுக்கு இரண்டு முறை உறுதிசெய்து கொள்ளவும். அவர்களுடன் தனிப்பட்ட உரையாடலை ஊக்கப்படுத்த வேண்டாம். உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பாக இருக்கவும்".

இவ்வாறு அஸ்வின் சரவணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x