Published : 05 May 2014 03:28 PM
Last Updated : 05 May 2014 03:28 PM

ட்விட்டர் தளத்தில் இணைந்த ரஜினிகாந்த்

பல்வேறு திரையுலக பிரபலங்கள் இருக்கும் ட்விட்டர் தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழ் திரையுலகினைப் பொறுத்தவரை தற்போது முன்னணி நடிகர்கள் பலரும் ட்விட்டர் தளத்தில் இணைந்து வருகிறார்கள். ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட சில நடிகர்கள் மட்டுமே ட்விட்டர் தளத்தில் இணையாமல் இருந்தார்கள்.

'கோச்சடையான்' திரைப்படம் இந்த வாரம் வெளிவர இருக்கும் நிலையில் இன்று ரஜினிகாந்த் தன்னை ட்விட்டர் தளத்தில் இணைத்து கொண்டார். அவரது ட்விட்டர் முகவரி >https://twitter.com/superstarrajini

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திரையுலகில் என்னுடைய வளர்ச்சி அதிசயமானது. அதற்கு என் ரசிகர்களே காரணம். சமூக வலைதளங்களின் வழியே என் ரசிகர்களோடு தொடர்பு கொண்டு, அவர்கள் சொல்வதை அறியவும், என்னுடைய கருத்துகளை அவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் விரும்பினேன்.” என கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில், ரசிகர்கள் பெருமளவில் பின் தொடர்ந்து வருகிறார்கள். அறிக்கை வெளியிட்டத்தில் இருந்து நிமிடத்திற்கு 100க்கும் மேற்பட்டோர் பின்தொடருவது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் ட்விட்டர் பக்கம் தொடங்கப்பட்ட சில நிமிடங்களில், அதை அதிகாரப்பூர்வ தளத்துக்கு உரிய வெரிஃபைடு குறியீட்டை ட்விட்டர் அளித்தது.

மேலும், ஒரே நாளில், அதுவும் சில மணி நேரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை ரஜினியின் ட்விட்டர் பக்கம் வசப்படுத்தியது கவனிக்கத்தக்கது.

மேலும், ரஜினியின் ட்விட்டர் வருகையொயொட்டி, Welcome to Twitter மற்றும் Thalaiva ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் ரஜினி இணைந்திருப்பதை, அவரது ரசிகர்கள் வெகுவாக வரவேற்றுள்ள அதேவேளையில், கோச்சடையான் பட்த்தை பிரபலப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x