Published : 22 Sep 2020 06:52 PM
Last Updated : 22 Sep 2020 06:52 PM
எனக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார் என்றும், அவர் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தப் புகாரால் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் "நடிகை பாயல் கோஷ், இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். சட்டரீதியான பார்வை, உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைக்கும்போது அதை நிரூபிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. சம்பந்தப்பட்ட ஒருவரையோ அல்லது அனைவரையுமே அழிக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு சமூகவலைதளப் பயனர் ஒருவர், உங்களுக்கு நெருக்கமான யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் இதையேதான் சொல்வீர்களா என்று கேட்டிருந்தார்.
அதற்கு கஸ்தூரி, "நெருங்கியவர்கள் என்ன, எனக்கே நடந்திருக்கிறது. இது இப்படித்தான். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் ஆறுதல்கள் உண்டு. ஆனால், என் தனிப்பட்ட பார்வை என்பது சட்டமல்ல. பொய்க் குற்றச்சாட்டுகளை அடையாளப்படுத்தும் வகையில்தான் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதாரங்களைச் சார்ந்துதான் இருக்க வேண்டும்" என்று பதிலளித்துள்ளார்.
So I have complete sympathy for victims of sexual harrassment. But My personal view is not law. The due process of law is designed to discourage fake allegations and must therefore stay reliant on evidence.
— Kasturi Shankar (@KasthuriShankar) September 21, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT