Published : 22 Sep 2020 11:51 AM
Last Updated : 22 Sep 2020 11:51 AM
'பிசாசு' தலைப்பைக் கொடுத்ததற்காக, பாலாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மிஷ்கின்.
தனது பிறந்த நாளை முன்னிட்டு, அடுத்த படத்தை அறிவித்துள்ளார் மிஷ்கின். ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க 'பிசாசு 2' படத்தை மிஷ்கின் இயக்கவுள்ளார். இதில் ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கவுள்ளார்.
முன்னதாக, பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் 'பிசாசு'. 2014-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது 'பிசாசு 2' இயக்கவுள்ளதால், தலைப்பிற்கான உரிமையை பாலாவிடம் கேட்டார். அவரும் உடனே தலைப்பிற்கான உரிமையைக் கொடுத்துள்ளார்.
இதற்காக மிஷ்கின், பாலாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பாலாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மிஷ்கின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா. 'பிசாசு 2' இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்குச் சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களைப் பதிக்கிறேன்".
இவ்வாறு மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா @bstudios_offl . 'பிசாசு 2' இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்கு சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களை பதிக்கிறேன். pic.twitter.com/WcmdMVotJX
— Mysskin (@DirectorMysskin) September 21, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment