Published : 16 Sep 2020 03:45 PM
Last Updated : 16 Sep 2020 03:45 PM
அப்பாவின் உடல்நிலை சீராகவுள்ளது என்று எஸ்பிபி சரண் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்குத் திரும்பி வருகிறது. மருத்துவமனை அறிக்கை தவிர்த்து அவருடைய மகன் எஸ்பிபி சரணும் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்து ட்வீட்களும், வீடியோக்களும் வெளியிட்டு வருகிறார்.
அதன்படி, இன்று (செப்டம்பர் 16) எஸ்பிபி சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. ஃபிசியோதெரபி தொடர்கிறது. எக்மோ மற்றும் செயற்கை சுவாச உதவி தொடர்கிறது. ஆனால் நீண்ட நாட்களுக்கு அவை தேவைப்படாது என நம்புகிறேன். எம்ஜிஎம் ஹெல்த்கேரில் இருக்கும் மருத்துவர் குழுவுக்கும், அப்பாவுக்காகப் பிரார்த்தனை செய்யும் உங்கள் அனைவருக்கும் நன்றி"
இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்
#spb health update 16/9/20
Dad is stable and is continuing physio. Ekmo and ventilator continue to be on but hopefully for not long. Thanks to the team of doctors from #MGMHealthcare and all of you who have been praying for him.— S. P. Charan (@charanproducer) September 16, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT