Published : 04 Aug 2020 06:23 PM
Last Updated : 04 Aug 2020 06:23 PM

ஹெலன் தமிழ் ரீமேக்கின் தலைப்பு முடிவு?

சென்னை

'ஹெலன்' தமிழ் ரீமேக்கின் தலைப்பை படக்குழு முடிவு செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வினீத் ஸ்ரீனிவாசன் தயாரிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'ஹெலன்'. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

'ஹெலன்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி, அருண் பாண்டியன் தயாரித்து வருகிறார். அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடித்து வரும் இந்தப் படத்தை 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குநர் கோகுல் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்துக்கு 'அன்புக்கு இனியாள்' என்று பெயரிடப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. மேலும், 'ஹெலன்' படத்தின் இந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் கைப்பற்றியுள்ளார். அதில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார்.

'அன்புக்கு இனியாள்' படத்தின் பணிகளை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு, 'கொரோனா குமார்' படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார் இயக்குநர் கோகுல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x