Published : 30 Jul 2020 06:01 PM
Last Updated : 30 Jul 2020 06:01 PM
தொலைக்காட்சி ஒளிபரப்பில் இப்போது வரை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது 'முத்து'
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான படம் 'முத்து'. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் மீனா, சரத்பாபு, ராதாரவி, செந்தில், வடிவேலு, ஜெயபாரதி, சுபஸ்ரீ, விசித்ரா, ரகுவரன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்திருந்தனர்.
கவிதாலயா நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஜப்பானில் இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்.
இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை வைத்துள்ள சன் டிவி, பல்வேறு விடுமுறை நாட்களில் படத்தை ஒளிபரப்பி வருகிறது. இந்தக் கரோனா அச்சுறுத்தலில் கூட ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை, சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை ஆகியவற்றில் பெரும் வரவேற்பு பெற்ற படங்களை ஒளிபரப்பி வருகிறது.
அந்த வரிசையில் ஜூலை 19-ம் தேதி மாலை சன் தொலைக்காட்சியில் 'முத்து' ஒளிபரப்பப்பட்டது. அன்றைய ஒளிபரப்பின்போது பலரும் 'முத்து' குறித்து கருத்துத் தெரிவித்து வந்தார்கள். தற்போது ஜூலை 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலான அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்து BARC நிறுவனம் பட்டியல் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலின்படி 'முத்து' படம் 10,180 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதற்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம்' படத்துக்கு 9,347 புள்ளிகளும், அஜித் நடிப்பில் வெளியான 'வீரம்' படத்துக்கு 6,666 புள்ளிகளும் கிடைத்துள்ளன.
'முத்து' படத்துக்கு இப்போது வரை மக்களிடையே பெரும் ஆதரவு இருப்பது, இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது.
@HeartthrobKHKT Week 29 data: Tamil Programmes .For custom viewership data, visit https://t.co/CT4Nvm2Rub pic.twitter.com/v2dyYpbcFu
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT