Published : 01 Jul 2020 12:23 PM
Last Updated : 01 Jul 2020 12:23 PM
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நீதிபதிகள் மற்றும் ரேவதி ஆகியோருக்கு உறுதுணையாக நிற்போம் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதில் தலைமைக் காவலர் ரேவதி துணிச்சலாக சாட்சி கூறியுள்ளார். அவருக்குப் பலரும் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தீரமிகு ரேவதி, நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளீர்கள். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்போம்".
இவ்வாறு வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
எப்போதுமே சமூக வலைதளத்திலிருந்து விலகியே இருக்கும் வெற்றிமாறன், 2 ஆண்டுகளுக்குப் பிறகு ட்விட்டர் பக்கம் வந்து இந்தச் சம்பவத்துக்குக் கருத்துக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Honourable judges P. N. Prakash, P. Pugazhendhi, magistrate Bharathidasan, courageous Revathi, you’ve given us hope. We stand by you.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT