Published : 29 Jun 2020 02:40 PM
Last Updated : 29 Jun 2020 02:40 PM

சூர்யாவைப் பாராட்டிய சேரன்

சென்னை

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு இயக்குநர் சேரன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சூர்யா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் பல்வேறு விஷயங்களைச் சுட்டிக் காட்டி தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

இந்த அறிக்கைக்கு இணையத்தில் பலரும் சூர்யாவுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.

சூர்யாவின் அறிக்கை குறித்து இயக்குநர் சேரன், "கைகோத்ததற்கு நன்றி சூர்யா. அருமையான கடிதம். அகிம்சை முறையில் எடுத்துச்சொல்வோம். அரசிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை விண்ணப்பமாக முன்வைப்போம். அனைவரின் தேவை இதுவென அறியும்போது அரசும் தன்னை மாற்றிக்கொள்ளும் நம்புவோம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x