Published : 21 May 2020 11:58 AM
Last Updated : 21 May 2020 11:58 AM

சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட நாசர்: 'கபடதாரி' தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட நாசரின் செயலைப் பாராட்டி 'கபடதாரி' தயாரிப்பாளர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'கபடதாரி'. இதில் நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனஞ்ஜெயன் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் கரோனா ஊரடங்கினால் தடைப்பட்டன. தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, 'கபடதாரி' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

'கபடதாரி' படத்தில் நாசர் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார். மேலும், 15 சதவீதம் சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாகவும் நாசர் தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

"நாசர் மற்றும் கமீலா நாசர் ஆகியோருக்கு நன்றி. 'கபடதாரி' படத்துக்கு உங்களுக்கு வழக்கத்தை விட குறைவான சம்பளத்தையே தந்தோம், இருந்தாலும் அதிலிருந்து 15 சதவீத சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு டப்பிங்கை முடித்துவிட்டீர்கள். படத்துக்கு நீங்கள் தந்த ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். உங்களைப் போலவே இன்னும் பலர் வளரட்டும்.

பல தயாரிப்பாளர்கள் பெரிய நஷ்டத்தில் இருக்கும்போது, எப்படி தங்கள் கடனை அடைப்பது, முதலீட்டை திரும்பப் பெறுவது, எப்போது பெறுவது என்பதில் நிச்சயமற்ற சூழல் நிலவும்போது, இப்படி நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்து தயாரிப்பாளரை ஆதரிக்கும்போது அது பண ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் உதவிகரமாக உள்ளது".

இவ்வாறு தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x