Published : 19 May 2020 12:05 PM
Last Updated : 19 May 2020 12:05 PM

இப்போது ஒரு மோசமான சூழலில் இருக்கிறோம்: 'ஆதித்ய வர்மா' தயாரிப்பாளர்

இப்போது ஒரு மோசமான சூழலில் இருக்கிறோம் என்று 'ஆதித்ய வர்மா' தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மலையாளத்தில் ஈ4 என்டர்டையின்மென்ட் நிறுவனம் முன்னணித் தயாரிப்பு நிறுவனமாக வலம் வருகிறது. தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா 'அன்னாயும் ரசூலும்', 'நார்த் 24 கதம்', 'குப்பி', 'எஸ்ரா', 'கோதா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார்.

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஆதித்ய வர்மா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிலும் கால்பதித்தார். முகேஷ் மேத்தா சமூக வலைதளத்தில் எப்போதுமே தீவிரமாக இருப்பார். படங்கள் தயாரிப்பு மட்டுமல்லாது, முன்னணி இதர மொழிப் படங்களை கேரளாவில் விநியோகமும் செய்து வருகிறார்.

தற்போது நிலவி வரும் ஓடிடி வெளியீட்டுப் பிரச்சினை குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் முகேஷ் மேத்தா. அதில் அவர் கூறியிருப்பதாவது:

"சில திரைப்படங்கள் நேரடியாக ஆன்லைனில் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்த நாள் முதல் இனி திரையரங்குகள் மூடப்பட்டுவிடுமா?, தயாரிப்பாளர்கள் இனி ஆன்லைன் வெளியீட்டைத்தான் தேர்ந்தெடுப்பார்களா என்ற விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருசில புள்ளிவிவரங்களின் மூலம் திரையரங்கில் வெளியாகும் படத்தின் வசூலுக்கு இணையாக ஆன்லைன் வெளியீட்டால் கொடுக்கவே முடியாது என்பது நிரூபணம் ஆகும்.

2019-ம் ஆண்டு பெரிய ஹீரோக்கள் இல்லாமல் வெளியான இந்திப் படங்களின் வசூல், அதோடு இவை இந்தியாவில் மட்டும் வசூலானது அல்ல. வெளிநாட்டு வசூலும் இதில் அடங்கியுள்ளது. ஒரு படத்தை திரையரங்கில் வெளியிடவில்லை என்றால் அந்தத் தயாரிப்பாளர் தோல்வி அடைந்தவர் ஆவார்.

பாலிவுட் படங்கள்

கபீர் சிங் - ரூ.278 கோடி

உரி -ரூ.244 கோடி

மிஷன் மங்கள் -ரூ.206 கோடி

சிச்சோர்- ரூ.150 கோடி

ட்ரீம் கேர்ள் - ரூ.140 கோடி

பாலா - ரூ.100 கோடி

லுகா சுப்பி - ரூ.89 கோடி

கல்லி பாய் - ரூ.135 கோடி

தமிழ்

கைதி

சர்வம் தாளமயம்

ஆதித்ய வர்மா

கோமாளி

எல்கேஜி

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

மலையாளம்

தண்ணீர் மதம்

ஆண்டிராய்ட் குஞ்சப்பன் வெர்சன் 2.5

கேட்டியல்லான்னு எண்டே மலாகம்

உயரே

விஜய் சூப்பரும் பொய்ரானிமுயும்

ஹெலென்

வைரஸ்

ஜூன்

சூடானி ஃப்ரம் நைஜீரியா

ரசிகர்கள் திரையரங்குகளுக்குத் திரும்ப வரவேண்டும் என்றால் நாம் தியேட்டர் அதிபர்களுக்கு அவர்களுக்கு உரிய கிரெடிட்ஸைக் கொடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக நூற்றுக்கணக்கான தனி திரையரங்கங்கள், திரையரங்குகளைப் புதுப்பித்ததன் மூலம் தென்னிந்தியாவில் புரட்சி செய்த சத்யம் திரையரங்க அதிபர் கிரண் ரெட்டி உள்ளிட்டோருக்கு.

நாம் இப்போது ஒரு மோசமான சூழலில் இருக்கிறோம். இதில் யாரேனும் பிழைத்தால் மகிழ்ச்சி, அப்படித் தயாரிப்பாளர்கள் பிழைக்கும்போது, தியேட்டர்கள் திறக்கப்படும் நேரத்தில் திரையிடுவதற்கு ஏராளமான படங்கள் கைவசம் இருக்கும். குறைவான அரங்குகளோடும், குறைவான காட்சிகளோடும் திரைப்படங்களுக்கு அதிக திரைகள் தேவைப்படும். அதுவரை அமைதியுடன் காத்திருப்போம்"

இவ்வாறு முகேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x